இந்த செடியை வீட்டில் வளர்த்தால் எமன் கூட உள்ளே நுழைய முடியாதாம்! தினமும் இதை நெற்றியில் வைத்துக் கொண்டால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

yeman-thulasi
- Advertisement -

எமன் கூட வீட்டில் நுழையக்கூடாத அளவிற்கு தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி இந்த ஒரு செடிக்கு உண்டு. இந்த செடி கண்டிப்பாக எல்லோருடைய வீடுகளிலும் இருப்பது மிகுந்த நன்மைகளை தரக்கூடியது. சாஸ்திர ரீதியாக மட்டுமல்லாமல், மூலிகை செடியாகவும் இருக்கக்கூடிய இந்த ஒரு செடி வீட்டில் இருந்தால் ஆரோக்கியமும், ஆயுலும் அதிகரிக்குமாம். அப்படி என்ன செடி அது? இதைப்பற்றிய சுவாரஸ்ய ஆன்மீக குறிப்பு தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாங்க.

எல்லோருடைய வீட்டிலும் பெரும்பாலும் இருக்கக்கூடிய ஒரு செடி துளசி! துளசி ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நற்குணங்களை கொண்டு விளங்குகிறது. இந்த செடிக்கு தீய சக்திகளை விரட்டியடிக்க கூடிய ஆற்றல் இருப்பது அனைவரும் அறிந்தது தான். எந்த வீட்டில் காலை, மாலை இரு வேளையிலும் துளசி பூஜை செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நூற்றுக்கணக்கான யாகம் செய்த பலன் கிடைக்குமாம். அந்த அளவிற்கு மகத்துவங்கள் நிறைந்த இந்த துளசி பூஜை பெண்கள், குழந்தைகள் செய்து வரலாம். துளசி செடியை வைத்து அதற்கு முறையாக பூஜை செய்து துளசி தேவியின் அருள் பெற்றவர்கள் இல்லத்தில் எமன் கூட உள்ளே நுழைய தயங்குவான்.

- Advertisement -

தினமும் சிறிதளவு துளசி இலைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு சளி, கபம் அண்டாது. இதனால் ஆயுள் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உண்டு. துளசி ஒரு மருத்துவ மூலிகையாக மட்டும் அல்லாமல், புனிதமான ஒரு செடியாகவும் பார்க்கப்படுவதால் இதன் காற்று பட்டால் கூட நமக்கு ஏற்படக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கி விடுமாம். துளசியை தொட்டு தினமும் வணங்கி வருபவர்களுக்கு எதிர்மறை ஆற்றல் விலகி, அவர்கள் புனிதம் அடைகிறார்கள். அவரை பீடித்து கொண்டிருக்கும் பீடை, தரித்திரம் யாவும் நீங்கும். காத்து கருப்பு எதுவும் அண்டாது. நீண்ட தூர பயணம் செய்பவர்கள் சிறிதளவு துளசியை கையில் வைத்து செல்லலாம். வேப்பிலையை கூட பலர் கையில் வைத்துக் கொண்டு வெளியில் செல்வதை பார்த்திருப்போம்.

இந்த துளசி செடியை நட்டு வைத்திருக்கும் வேர் பகுதியை சுற்றி இருக்கும் மண் திருமண்ணிற்கு ஒப்பானது. திருமண் எவ்வளவு புனிதமான ஒரு விஷயமோ, அதே போல துளசி செடியின் வேரில் இருக்கக்கூடிய மண்ணையும் தினமும் நெற்றியில் இட்டுக்கொண்டு செல்வதால் உங்களை காக்கும் கவசமாக அது பாதுகாக்குமாம். நம்மை சுற்றி இருக்கும் திருஷ்டிகளும், பொறாமை கண்களும், கண்ணேறுகளும் ஒழியும். பகைவர்களின் சூழ்ச்சிகளை இந்த மாபெரும் சக்தி முறியடித்து எப்பொழுதும் நமக்கு எவரும் வெல்ல முடியாத வெற்றி வாய்ப்புகளை கொடுக்குமாம்.

- Advertisement -

தினமும் பூஜை அறையில் தீர்த்தத்தில் துளசி போட்டு பெருமாளை வணங்கி பக்தியுடன் அந்த தீர்த்தத்தை உட்கொண்டு வந்தால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்குமாம். தினமும் பகவானது திருபாதங்களில் சந்தனம் கலந்து துளசியை ஒட்டி வைக்க வேண்டுமாம். இதனால் ஒரு லட்சம் அஸ்வமேதை யாகம் செய்த பலனை பெறலாமாம்.

இதையும் படிக்கலாமே:
28/1/2023 அன்று ரதசப்தமி! நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அன்றோடு தொலைந்து போக எருக்கன் இலை குளியலை எப்படி போடுவது தெரியுமா?

துளசி இலைகளை துவாதசி, பௌர்ணமி, அமாவாசை, சங்கராந்தி, உச்சி வேலை, பொழுது சாய்ந்ததும், இரவு நேரங்களில் பறிக்கக் கூடாது. இது தோஷத்தை உண்டாக்கக்கூடிய செயலாகும். மேலும் துவாதசி தினத்தில் துளசியில் பகவான் ஸ்ரீ விஷ்ணு வசிப்பதாக புராணங்கள் கூறுகிறது எனவே துவாதசி அன்று முந்தைய நாளை பறித்த இலைகளை கொண்டு பகவானுக்கு அர்ச்சனை செய்து பலன் அடையலாம். தன்வந்திரி பாற்கடலில் இருந்து கொண்டு வந்த அமுதத்தில் துளசி சாறும் உண்டு என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த அளவிற்கு மகத்துவம் பொருந்திய துளசி செடியை கண்டிப்பாக வீட்டில் வளர்த்து அதற்கு எளிமையாக பூஜைகள் செய்து பெரும்பயன் பெறலாமே!

- Advertisement -