வீட்டில் துளசி செடி வைக்கும் திசை

thulasi
- Advertisement -

துளசி செடி மகாலட்சுமி அம்சம் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலானோர் வீட்டில் துளசி செடியை வைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஒரு சில பேர் வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும். ஒரு சில பேர் வீட்டில் பண கஷ்டம் இருக்கும். ஒரு சில பேர் வீட்டில் கடன் தொல்லை இருக்கும்.

இப்படி பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சரியாக வேண்டும் என்றாலும், வாஸ்து சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகவும் இந்த துளசி செடியை நம்முடைய வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் என்பத்தைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

துளசி செடி வைக்க வேண்டிய திசை

உங்கள் வீட்டில் வடகிழக்கு மூலையில் துளசி செடியை வைக்கணும். பொதுவாக வடகிழக்கு மூலை உயரக்கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது அந்த இடத்தில் உயரமான திட்டு அல்லது சதுரமாகவே தரையிலிருந்து ஒரு அடி உயரக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த துளசி செடியை மட்டும் வடகிழக்கு மூலையில் கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்து வளர்ப்பது செல்வ செழிப்பை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒரு துளசி செடியை தொட்டியில் வைத்திருந்தால் கூட, வடகிழக்கு மூலையில் ஒரு ஸ்டூல் போட்டு இந்த தொட்டியை வைத்து வளர்த்து பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் தானாக சரியாகி விடும். அது மட்டும் இல்லாமல் செல்வ செழிப்பு நல்லபடியாக உயர தொடங்கிவிடும். அதுமட்டுமில்லாமல் வீட்டில் ஏதாவது வாஸ்து தோஷம் இருந்தால் கூட அதை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த துளசி செடிக்கு உண்டு.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த வடகிழக்கு மூலையில், இந்த துளசி செடியை வைக்கும் போது வீட்டில் இருக்கும் ஒட்டுமொத்த வாஸ்து பிரச்சனைகளால் வரும் கஷ்டங்களையும் இந்த துளசி செடியை சரி செய்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் குடும்பத்தில் நல்லது நடக்கும். இது மட்டுமல்லாமல் செடிகள் சார்ந்த இன்னும் ஒரு சில விஷயங்களை பற்றி அறிய தகவல்களையும் தொடர்ந்து பார்த்து விடுவோம்.

உங்களுடைய வீட்டில் முருங்கைக்கீரை செடி இருந்தால் அந்த செடியை உங்களுடைய உயரத்திற்கு மட்டும் வளர்த்து வாருங்கள். அதாவது 6 அடி என்ற கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேலே உங்களை விட உயர்ந்த அளவில் முருங்கை மரம் வளரக்கூடாது. அப்படி வளர்ந்து இருந்தால் அதை உடைத்து விடுவது நன்மையை தரும்.

- Advertisement -

அதேபோல இந்த முருங்கைச் செடியை வைத்தபிறகு உங்களுடைய வீட்டில் ஏதாவது சொத்து பிரச்சனை வந்தது, சொத்துக்கள் கைவிட்டு சென்றது என்ற சூழ்நிலை வந்திருக்குதான்னு பாருங்க. அப்படி இருந்தால் உடனடியாக அந்த முருங்கைச் செடியை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துவது தான் உங்களுக்கு நன்மையை தரும்.

சில பேருக்கு இந்த முருங்கைச் செடி சொத்தில் நஷ்டத்தை கொடுத்து விடும். முருங்கை செடி ராசி இருக்காது. அப்படி இருந்தால் அந்த செடியை நீங்க வைக்காமல் இருப்பது நல்லது. எங்கள் வீட்டில் முருங்கை செடி ரொம்ப நாளா இருக்கு. நாங்க நல்லாத்தான் இருக்கோம் அப்படின்னா, அந்த செடியை வெச்சுக்கோங்க பிரச்சனை இல்லை.

செவ்வரளி செடி. வீட்டிற்கு பின்னால் தோட்டம் இருக்கும் பட்சத்தில் அந்த தோட்டத்தில் தோட்டமாக இந்த அரளிச்செடி இருக்கலாம். நிலை வாசலில் வீட்டிற்கு உள்ளே வரும்போது, அடுத்தவர்கள் அந்த செடியை பார்க்கும் அளவிற்கு உங்களுடைய வீட்டில் அந்த செவ்வரளி செடி இருந்தால் அதை அகற்றுவது நல்லது.

இந்த செடி வைத்த பின்பு உங்களுடைய குடும்பத்தில் என்னென்ன மாற்றம் வந்திருக்கிறது என்று பாருங்கள். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை, உறவினர்களிடம் சண்டை, உறவுகளுக்குள் பிரிவு ஏதாவது இருந்தால் இந்த செடியை உடனடியாக உங்கள் வீட்டு நிலை வாசலில் இருந்து அப்புறப்படுத்துவது நல்லது.

இதையும் படிக்கலாமே: நாளும் கோளும் நமக்கு நன்மையை செய்ய பரிகாரம்

பல வருடங்களாக எங்கள் வீட்டில் இந்த செவ்வரளி செடி நிலை வாசலில் இருக்கிறது. எங்களுக்கு பிரச்சனை இல்லை என்பவர்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது. ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -