10 துளசி இலைகள் இருந்தால் போதும் பத்தும் சாத்தியமாகும்! துளசி இலைகள் கொண்டு செய்யும் அற்புத பரிகாரங்கள் நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா?

thulasi-cash

துளசி இலை ஒரு தெய்வீக மூலிகை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான் என்றாலும் இதில் இருக்கும் மகத்துவமான குணங்கள் பலருக்கும் இன்னும் தெரிவதில்லை என்று தான் கூற வேண்டும். துளசி இலைகளில் இருக்கும் தெய்வீக தன்மை நம் வீட்டில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் நீக்கக்கூடியது ஆகும். நம்மிடம் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த ஒரு மூலிகை வைத்தே தீர்வுகளும் காணமுடியும். மூலிகைகளில் முதன்மையாக விளங்கும் துளசி சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனின் ஸ்வரூபமாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது. துளசி செடி வைத்திருக்கும் வீட்டில் நாராயணரின் அருளும், ஆசியும் நிச்சயம் இருக்கும். அத்தகைய துளசி இலைகளை வைத்து செய்யக்கூடிய பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

thulasi

வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகளை நீக்கி, நல்ல அதிர்வலைகள் அதிகரிக்க செய்ய துளசி தீர்த்தம் நமக்கு உதவி செய்யும். 5 துளசி இலைகளை பூஜை அறையில் இருக்கும் பித்தளை செம்பில் போட்டு வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து அந்த நீர் புனிதமாக மாறிவிடுகிறது. இந்த தீர்த்தத்தை வைத்து வீடு முழுவதும் தெளித்து வந்தால் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் நீக்கப்பட்டு, பாஸிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

திடீரென நீங்கள் சோர்வாக உணரும் பொழுது, அல்லது அடிக்கடி ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் வரும் பொழுது இந்த தீர்த்தத்தை மூன்று முறை தலையில் தெளித்துக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு இந்த தீர்த்தத்தை கலந்து தினமும் குளியுங்கள். இப்படி செய்யும் பொழுது விரைவில் உடல்நலம் பலம் பெறும்.

thulasi-theertham

உங்கள் பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்காமல் அடங்காமல் இருக்கும் பொழுது இந்த பரிகாரத்தை செய்யலாம். குறும்புத்தனம் அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு, சொல் பேச்சு கேட்காத குழந்தைகளுக்கு உங்கள் பேச்சை கேட்க வைக்க 3 துளசி இலைகளை காக்கை, குருவிகளுக்கு தானமாக கொடுக்கலாம். பறவைகளை நீங்கள் வைக்கும் துளசி இலைகளை சாப்பிட செய்யுங்கள். உங்கள் குழந்தை உங்கள் பேச்சைக் கேட்கும்.

- Advertisement -

சுய ஜாதகத்தில் செவ்வாயால் பிரச்சனை இருப்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கடன் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் துளசி செடிக்கு மஞ்சள் கலந்த தண்ணீரை 3 டம்ளர் அளவிற்கு தெளித்து விட்டு, பணிந்து வணங்க வேண்டும். பின்னர் இரண்டு அகல் தீபங்களை நெய் விட்டு ஏற்றி வைத்தால் போதும், சுப காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

thulasi chedi

தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்க மற்றும் உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரம் விருத்தி காணவும் வெள்ளிக்கிழமை தோறும் துளசி தேவிக்கு பால் அல்லது இனிப்பு பண்டங்களை நிவேதனம் வைத்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வழிபட்டு வரவேண்டும். பின்னர் நீங்கள் வைத்த நிவேதன பொருளை கன்னிப் பெண்ணுக்கு தானம் செய்யுங்கள். இப்படி செய்து வர தொழிலில் அமோக வளர்ச்சியை காண்பீர்கள்.

donkey milk

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் பணிபுரியும் இடத்தில் நிறைய அவமானங்களை சந்தித்து இருந்தால் உங்களுக்கு மரியாதையும், மதிப்பும் உண்டாக திங்கள் கிழமையில் 16 துளசி விதைகளை பறித்து அதை சிறிய அளவிலான வெள்ளைத் துணியில் முடிந்து கொண்டு, தினமும் உங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். நீங்கள் வேலைக்கு கொண்டு செல்லும் பையில் இதனை வைத்துக் கொண்டு எடுத்து சென்றால் போதும், உத்தியோக ரீதியான பிரச்சனைகள் நீங்கி உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

purse

நீங்கள் எந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும், உங்களுக்கு பண பிரச்சனை அதிகமாக இருக்கும் பொழுது பணத்தை வசியம் செய்ய 5 துளசி இலைகளை எப்பொழுதும் உங்களுடைய பாக்கெட் அல்லது மணி பர்சில் வைத்துக் கொண்டு வெளியில் செல்லுங்கள். தொழில், வியாபாரம் செய்யும் இடங்களில் இருக்கும் கல்லா பெட்டிகளிலும் வைக்கலாம். இலைகள் காய்ந்த பின் மீண்டும் வேறொரு புதிய இலைகளை இது போல் செய்து வைத்தால் போதும் பணத்தட்டுப்பாடு இல்லாமல் தனம் தாராளமாக சேரும்.

Thulasi

துளசி மாடத்திற்கு காலை, மாலை விளக்கேற்றி வேண்டுதல் வைத்தால் வேண்டிய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்கிற ஐதீகம் உண்டு. நம்பிக்கையோடு துளசி பூஜை செய்து வர மனதில் நினைத்த காரியம் அப்படியே நிறைவேறும். தீராத நோய் கூட ஏழு துளசி இலைகளுடன், ஏழு மிளகு சேர்த்து சாப்பிடும் பொழுது தீர்ந்து விடுவதாக நம்பப்படுகிறது. காரிய வெற்றிக்கு துளசி சாற்றை நெற்றியில் இட்டுக் கொண்டு செல்லலாம். இப்படியாக துளசியின் பயன்பாடு மனிதர்களுக்கு மகத்துவமான பலன்களைக் கொடுக்கக் கூடியது. உங்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ப துளசி பரிகாரம் செய்து நிவாரணம் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
தை மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்தால் அதிகப்படியான பலன்களை நிச்சயம் பெறலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.