வீட்டில் செல்வம் தங்க உதவும் துளசியின் பலன்கள் பற்றி தெரியுமா ?

mahalakshmi

உயிர்களும், உயிராற்றல் உள்ள அனைத்தையும் இறைவனாக பாவித்து வணங்குவது பாரத நாட்டிற்கே உரிய மரபாகும். மிக பழங்காலந்தொட்டு இப்போது வரை பிற உயிர்களைக் கொன்று உணவாக பிற நாட்டினர் உண்கின்றனர். ஆனால் அக்காலத்திலேயே விலங்குகளின் உயிர்பலி மற்றும் உணவாக உண்ணும் முறை தடுத்து, அதற்கு மாற்றாக பல நன்மைகளை அளிக்கும் தாவரங்களை உணவாகவும், மருந்தாகவும் உட்கொள்ளும் முறையை மக்களுக்கு போதித்தனர் நம் ஞானிகள், முனிவர்கள். அப்படி அவர்கள் பல செடிகளின் தன்மைகளை பற்றி கூறும் போது துளசி செடியின் மகத்துவத்தை பற்றியும் கூறினர். அற்புதமான பல நன்மைகளை அளிக்கும் துளசி செடியை பற்றிய சில விடயங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

thulasi

துளசி செடி ஒரு வாசனைமிக்க மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடியாகும். இன்று உலகின் பல வெப்பமண்டல பகுதிகளில் இச்செடி வளர்க்கப்பட்டாலும் இதன் பூர்வீகம் இந்தியா ஆகும். நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கான மருந்து கூட்டு பொருட்களில் இந்த துளசி செடியின் இலைகள் மற்றும் வேர்கள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புக்கள் உள்ளன. துளசி நமது மத சடங்குகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது.

இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்களின் வீட்டில் இறைவனாக பாவித்து வணங்கப்படும் ஒரு துளசி செடி நிச்சயம் இருக்கும். இச்செடியை வீட்டில் வளர்ப்பதால் துஷ்ட சக்திகள் மற்றும் விஷ ஜந்துகள் அந்த வீட்டில் அநேகமாக நுழையாது. தினமும் அதிகாலையில் மற்றும் மாலை சந்தியா கால வேளைகளில் இந்த துளசி செடியை வணங்கி வந்தால் நம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கி இரையாற்றலை நிரப்பும் ஆற்றல் கொண்ட இறைமூலிகையாகும் துளசி.

thulasi chedi

இந்து மதத்தில் மகாவிஷ்ணுவை முதன்மை கடவுளாக வழிபடும் ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தில் துளசி செடி அந்த விஷ்ணுவின் பத்தினியான ஸ்ரீ லட்சுமி தேவியின் அம்சமாகவே பாவிக்கப்பட்டு வணங்கபடுகிறது. இந்த துளசி செடியை வீட்டில் மாடம் அமைத்து வழிபடப்படும் போது எல்லா செல்வங்கள் மற்றும் சுகத்திற்கு காரணமாகும் லட்சுமி தேவி அந்த இல்லத்தில் தொடர்ந்து வாசம் செய்கிறாள். பல தெய்வீக ஆற்றல்களை கொண்ட துளசி செடியை முறையாக பராமரிக்கப்படும் வீட்டில் நடக்க இருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் தன்மை கொண்டது என கூறுகிறார்கள்.

- Advertisement -

Thulasi

ஒரு வீட்டில் மாடத்தில் வளர்க்கப்பட்டு வழிபடப்படும் துளசி செடி அந்த வீட்டின் உயிராற்றலை தன்னுள் வைத்திருப்பதாக ஐதீகம். எப்படி முறையாக பராமரிக்கப்பட்டாலும் மாட துளசி வாடி வதங்கி போகிறதென்றால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்ய விருப்பமில்லாமல் வெளியேறிவிட்டாள் என்று அர்த்தம். களவுபோதல் அல்லது வேறு ஏதேனும் ஒரு கேடு அவ்வீட்டில் ஏற்படுவதற்கான முன்னறிவிப்பாகவும் இதை கருதலாம். அதே நேரத்தில் துளசி செடிகள் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த செழிப்புடன் வளர்கிறதென்றால் அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருப்பதையும் மேலும் பல சுப நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படவிருப்பதை காட்டும் அறிகுறியாகும். எனவே நமது வீட்டில் துளசி செடிகளை வளர்ப்பதோடில்லாமல் அதை முறையாக பராமரித்து வணங்கினால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
துளசி மாட பூஜை நேரத்தில் கூறவேண்டிய துளசி மந்திரம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thulasi payangal in Tamil. Thulasi chedi hass devotional power and we have explained the benefits of Thulasi chedi above in Tamil language.