வீட்டில் தினமும் துளசி பூஜையை இப்படி செய்து வந்தாலே போதும். சர்வ பாவங்களுக்கும் நிவர்த்தி கிடைக்கும். தோஷங்கள் நீங்கும். புண்ணியம் சேரும்.

thulasi
- Advertisement -

நாம் செய்த கர்ம வினைகளை குறைக்க, தோஷங்கள் நீங்க எத்தனையோ பரிகார முறைகளை செய்து வருகின்றோம். வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களை எதிர் கொள்கின்றோம். ஆனால், மனிதப் பிறவியில் பிறந்து நாம் அனுபவிக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய வழிபாடு துளசி வழிபாடு. மிக மிக சுலபமான முறையில் வீட்டில் துளசி பூஜையை இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரித்து, இப்படி செய்து வந்தாலே போதும். உங்கள் வாழ்வு சுபிட்சம் பெறும்.

thulasi

துளசி பூஜை செய்வதற்கு கட்டாயமாக வீட்டில் ஒரு துளசி செடி வளர்க்க வேண்டும். அது துளசி மாடத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு சிறிய தொட்டியில் வளர்த்து வந்தாலே போதும். உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில், இடவசதி உள்ளதோ அந்த இடத்தில் வைத்து சுத்தபத்தமாக தூய்மையாக வளர்த்தாலே துளசி செடி செழிப்பாக வளரும்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு துளசி செடி இருக்கும் இடத்திற்கு வரவேண்டும். துளசிச் செடிக்கு தினமும் புதியதாக மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். துளசிச் செடிக்கு முன் ஒரு மண் அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கம்ப்யூட்டர் சாம்பிராணி அல்லது சாதாரண சாம்பிராணி வத்தி, அல்லது சூடம் இதில் உங்கள் வீட்டில் எது இருக்கின்றதோ அதில் ஏதாவது ஒன்றினை துளசிச் செடிக்கு காண்பிக்க வேண்டும்.

thulasi

இந்த பூஜையை செய்யும் போது பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். துளசி செடிக்கு முன்பாகவே அமர்ந்து இரண்டு நிமிடம் கண்களை மூடி உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு ‘ஓம் துளசி தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து பஞ்ச பாத்திரத்தில் வைத்து இருக்கும் தண்ணீரை துளசிச் செடிக்கு தீர்த்தமாக ஊற்றி விடுங்கள். துளசி செடியை வலம் வர முடியும் என்றால் மூன்று முறை பிரதட்சணம் செய்யலாம். முடியாதவர்கள் நின்ற இடத்திலிருந்தே மூன்று முறை சுற்றி, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். துளசி பூஜை நிறைவடைந்து விட்டது. துளசி பூஜையை முடித்துவிட்டு அன்றாட தினசரி வேலைகளை நீங்கள் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பூஜையை ஆண்கள் வேண்டுமென்றாலும் செய்யலாம் பெண்கள் வேண்டுமென்றாலும் செய்யலாம். சுத்தபத்தமாக இருப்பவர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பூஜையை செய்து பலன் பெறலாம். இந்த பூஜையை இத்தனை நாட்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. தினசரி துளசி வழிபாடு இல்லத்தில் லட்சுமி கடாட்சத்தையும் சுபீட்சத்தையும் நிறைவாக வைத்திருக்கும்.

thulasi chedi

நிறைய பேருக்கு அசைவம் சாப்பிடுபவர்கள் துளசி செடிக்கு பூஜை செய்யலாமா என்ற சந்தேகம் இருக்கின்றது. துளசி பூஜை செய்துவிட்டு அசைவம் சாப்பிடுவது என்பது தவறு தான். அசைவம் சாப்பிடுபவர்கள் துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுகிறார்கள். அசைவம் சாப்பிடும் அன்று துளசி பூஜை செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிட்ட பின்பு துளசி செடிக்கு தீர்த்தம் கூட விடக் கூடாது. அது தவறான செயல் தான். துளசி என்பது மகாலட்சுமியின் ஸ்வரூபம். சுத்தபத்தமாக நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்தால் நிச்சயமாக நல்ல பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளவும்.

- Advertisement -