உங்கள் ஆசைகள் உடனே நிறைவேற, துளசியை இப்படி போட்டு வழிபாடு செய்தாலே போதும் தெரியுமா?

thulasi-perumal
- Advertisement -

எந்த செயலாக இருந்தாலும் சரி, காரியமாக இருந்தாலும் சரி முழு முதற்கடவுளான விநாயகரை முதலில் வணங்குவது தான் முறையான பரிகாரமாக இருக்கும். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லுக்கு ஈடு இணை என்பது இல்லை. ஒரே ஒரு அருகம்புல்லை விநாயகருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் விக்னேஸ்வராய நமஹ’ என்ற மந்திரம் உச்சரித்து வழிபட்டாலும் நீங்கள் போகும் காரியம் வெற்றி அடைந்து விடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விநாயகருக்கு எப்படி அருகம்புல் உகந்ததோ! அதேபோல் எம்பெருமானுக்கு துளசியும் மிக விசேஷமான மூலிகைப் பொருளாக இருக்கின்றது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் துளசியை இப்படி போட்டு பூஜிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். துளசியை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

perumal

ஸ்ரீமன் நாராயணனை துளசி இலைகளால் அர்ச்சனை செய்து வந்தாலே போதும். வேறு எந்த பூஜை, புனஸ்காரங்களும் தேவையில்லை. அந்த அளவிற்கு துளசி மகிமை வாய்ந்த ஒரு மூலிகையாக உள்ளது. துளசி அர்ச்சனை செய்து நாராயணனை வழிபட்டால் காரிய வெற்றி கிட்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. துளசிக்கு இத்தகைய மகிமை ஏற்படுவதற்கு காரணமாக பல புராண செய்திகள் நமக்கு விவரித்து கூறுகின்றது. நாராயணன் கழுத்திற்கு மாலையாக எப்பொழுதும் இருப்பது துளசி அம்மையார் தான். பெரும் பாக்கியம் பெற்ற துளசி அம்மையாரை இவ்வாறு பூஜிப்பதால் பல நன்மைகள் நாம் அடைய முடியும்.

- Advertisement -

ஸ்ரீமன் நாராயணருக்கு துளசி இலையால் அர்ச்சனை செய்து, சங்கு மற்றும் சாலகிராமம் வைத்து வழிபட்டால் முக்காலமும் உணரும் சக்தி கிடைக்கும் என்பது புராணக் கூற்று. இந்த மூன்றும் பெருமாளுக்கு உகந்த பொருளாக பார்க்கப்படுகின்றது. மிகவும் சக்திவாய்ந்த இந்த பொருட்களை ஒருசேர வைப்பதன் மூலம் நாம் அடையும் பலன் ஏராளம் என்றே கூறலாம்.

thulasi chedi

சிலரது வீட்டில் துளசி மாடம் அமைத்து வைத்திருப்பார்கள். துளசி மாடம் இல்லாதவர்கள் 12 என்ற எண்ணிக்கையில் செங்கற்களை எடுத்து மாடம் அமைத்துக் கொள்ளுங்கள். நடுவில் இருக்கும் துளசி செடிக்கு 12 என்ற எண்ணிக்கையில் சந்தன, குங்குமப் பொட்டை இலைகளிலும், தண்டிலும் இட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

துளசிச் செடியில் மகாலட்சுமியும், நெல்லியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எனவே நெல்லிச் செடியின் குச்சியை எடுத்து துளசி செடியுடன் நட்டு வைக்க வேண்டும். நெல்லி குச்சி கிடைக்காதவர்கள் கிருஷ்ணர் சிலை அல்லது பெருமாள் படம் வைத்து வழிபடலாம். மகாலட்சுமியுடன், மகாவிஷ்ணு இணைவதால் நல்ல நிகழ்வுகள் உங்கள் இல்லத்தில் நடைபெறும். சுபகாரிய நிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். திருமண தடை, சுப காரிய தடை நீங்கும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும்.

vishnu-laxmi

துளசி பூஜை செய்வதற்கு அகல் தீபம் ஒன்றே போதுமானது. சந்தன குங்குமம் இட்டதும், பெரிய அகல் தீபம் ஒன்றை துளசி செடியின் முன்பு வைத்து தீபம் ஏற்றுங்கள். மகாலட்சுமிக்கு விருப்பமானவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். பின்பு சுமங்கலி பெண்களுக்கு நெய்வேத்தியம் கொடுத்து, தாம்பூலத்துடன் துளசி இலைகளையும் சேர்த்து கொடுத்து வழி அனுப்பி வையுங்கள். இந்த பூஜையை வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. துளசி பூஜையுடன், துளசி அர்ச்சனை சேர்த்து செய்வதன் மூலம் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். உங்கள் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் எண்ணங்கள் விரைவில் ஈடேறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணம் என்ன, என்பதை கண்டுபிடிக்க 1 எலுமிச்சை பழம் போதும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thulasi valipadu in Tamil. Thulasi mahimai Tamil. Thulasi manthiram in Tamil. Thulasi pooja. Thulasi valipadu.

- Advertisement -