உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் சுலோகம் இதோ

thulasi-compressed

உயிர்கள் அனைத்துமே இறைவனின் அம்சமாக கருதுவது இந்து மதத்தின் கோட்பாடாகும். எனவே தான் அம்மதத்தில் எறும்பு முதல் யானை வரையான விலங்குகளும், பல வகையான தாவரங்கள், விருட்சங்கள் என அனைத்தும் வழிபடப்படுகின்றன. அப்படி அனைவராலும் ஒரு தெய்வீக மூலிகையாக கருதி வணங்கப்படும் தாவரமாக துளசி செடி இருக்கிறது. இந்த துளசி செடியை வணங்கும் போது துதிக்க வேண்டிய “துளசி ஸ்லோகம்” இதோ.

Thulasi

துளசி ஸ்லோகம்

யன்மூல ஸர்வ தீர்த்தாளி யன் மத்யே ஸர்வ தேவதா
யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தம் நமாம்யஹம்

ஓங்கார பூர்விகே தேவி ஸர்வதேவ ஸ்வரூபிணி
ஸர்வ தேவமயே தேவி சௌமாங்கல்யம் ப்ரயச்சமே

thulasi chedi

உங்கள் வீட்டில் துளசி மாடத்தில் இருக்கும் துளசி செடி உள்ள இடத்தை நீரால் கழுவி, அரிசி மாவு கோலமிட்டு, துளசிச் செடிக்கு நீரூற்றி, துளசி செடியின் இலைகளில் மஞ்சள், குங்குமம் வைத்து, பூ வைத்து, விளக்கேற்றி மேலே இருக்கும் துளசி ஸ்லோகத்தை 18 முறைகள் துதிப்பதால் உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். திருமணமான பெண்களின் மாங்கல்ய பலம் நீடிக்கும். மந்திரம் துதித்து முடித்ததும் முடிவில் துளசி செடியின் நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு துளசி செடியை வணங்க வேண்டும்.

- Advertisement -

thulasi

நமது நாட்டில் பல வகையான தெய்வீக மூலிகை செடிகள் இருக்கின்றன. அதில் இல்லங்கள் தோறும் வைத்து வழிபடப்படுவதும், பெருமாள் வழிபாட்டில் முக்கிய இடம் வகிப்பதும், முக்தியை வேண்டுவோர்க்கு முக்தியையும், போகத்தையும் தரவல்ல ஒரு கற்பக விருட்சம் துளசி செடியாகும். திருமகளான லட்சுமி தேவியின் அம்சம் கொண்ட செடி துளசி செடியாகும். இந்த தெய்வீக துளசி செடியை வணங்கி வருபவர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பணம் சேர செய்யும் கணேசர் துதி

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thulasi slokam in Tamil lyrics. It is also called as Thulasi manthiram in Tamil or Tulasi pooja mantra in Tamil or Tulasi stuti in Tamil or Thulasi manthirangal in Tamil.