உங்களுக்கு பணம் வரவு விடயங்களில் அதிர்ஷ்டத்தை தரும் துதி இதோ

vinayagar-compressed-1

நாம் அனைவருமே தினமும் ஏதேனும் ஒரு மன கவலையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் அன்றாட வாழ்வில் காலையில் தொடங்கி இரவு உறங்க செல்லும் முன்பு பலரும் ஏதேனும் ஒரு பிரச்சனை, சிக்கல் போன்றவற்றை சந்திக்கின்றனர். இதனால் மன நிம்மதி அற்ற நிலை ஏற்படுவதோடு, கவலைகளும் அதிகரிக்கிறது. இவற்றை எல்லாம் நீக்கும் சக்தி கொண்டவர் கணேசர் ஆகிய விநாயகர் பெருமான். அவரை வழிபடுவதற்கான “கணேசர் துதி” இதோ.

Vinayagar

கணேசர் துதி

ஓம் செல்வ விநாயகனே சரணம் சரணம்
ஓம் சக்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் சித்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் அரசமர விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஆதி நந்தி விநாயகனே சரணம் சரணம்

ஓம் வெள்ளெருக்கு விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஸ்ரீசக்ர விநாயகனே சரணம் சரணம்
ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஷண்முக விநாயகனே சரணம் சரணம்
ஓம் வெற்றி விநாயகனே சரணம் சரணம்

Vinayagar

ஓம் வக்ரதுண்ட விநாயகனே சரணம் சரணம்
ஓம் சுந்தர விநாயகனே சரணம் சரணம்
ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
ஓம் வெங்கடேச விநாயகனே சரணம் சரணம்
ஓம் பிரசன்ன விநாயகனே சரணம் சரணம்

- Advertisement -

ஓம் ரத்ன விநாயகனே சரணம் சரணம்
ஓம் கற்பக விநாயகனே சரணம் சரணம்
ஓம் லக்ஷ்மி விநாயகனே சரணம் சரணம்
ஓம் பம்பா விநாயகனே சரணம் சரணம்
ஓம் நவசக்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் வினைதீர்த்த விநாயகனே சரணம் சரணம்

vinayagar

விண்ணின் நாயகனாகிய கணேசர் எனப்படும் விநாயகர் பெருமானுக்குரிய துதி இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு வெளியில் செல்வதற்கு முன்பு 3 முறை துதித்து விட்டு செல்வது நல்லது. செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று, விநாயகருக்கு தீபமேற்றி இந்த துதியை 27 முறை படிப்பதால் உங்களின் மனக்கவலைகள் தீரும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சீக்கிரம் முடிவிற்கு வரும். பணம் சம்பந்தமான விடயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். வளமை பெருகும். மன அமைதி உண்டாகும்.

vinayagar

மனித வாழ்க்கையில் பணம் என்பது ஒரு இன்றியமையாத இடத்தை பெறுகிறது. மனிதர்களின் மனக்கவலைகள் 90 சதவீதம் இந்த பணத்தை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. இப்படி வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் பெரும்பாலானோருக்கு ஏதேனும் தடை, தாமதங்கள் ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் போக்கி பணம் சம்பந்தமான விவகாரங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தருபவர் விநாயகர் பெருமான். அவருக்குரிய இந்த துதியை தினமும் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
முக வசீகரம் உண்டாக சிவ மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ganesh thuthi in Tamil. It is also called as Ganapathi mantram in Tamil or Vinayagar thuthi padal in Tamil or Athirstam tharum manthiram in Tamil or Vinayagar padal varigal in Tamil or Ganapathi thuthi in Tamil.