வீட்டில் இந்த 1 செடியுடன் இதை மட்டும் சேர்த்து வைத்தால் இன்னும் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா?

thotta-chinungi-thulasi

வீட்டில் நல்ல ஆற்றல்கள் பெருக பசுமையான செடி வகைகளை வளர்க்க வேண்டியது அவசியமாகும். உங்களிடம் எவ்வளவு இடம் இருக்கிறதோ! அந்த இடத்திற்கு தகுந்தார் போல் ஏதாவது ஒரு செடி வகைகளை உங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக, பசுமையாக வளர்த்து வாருங்கள். அந்த வீட்டில் நிச்சயம் நேர்மறை ஆற்றல்கள், நல்ல சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். அவ்வகையில் தெய்வீக செடியாக விளங்கும் துளசி செடியை எல்லோருடைய வீட்டிலும் வளர்த்து வருவது வாடிக்கை. அத்தகைய துளசியுடன் எதை சேர்த்து வைத்தால் யோகம்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

thulasi

துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. துளசியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. துளசி செடியை வழிபடுபவர்களுக்கு நிம்மதியும், செல்வமும் எப்போதும் நிறைந்து இருக்கும். அவ்வகையில் துளசி செடியுடன் இந்த ஒரு செடியையும் சேர்த்து வளர்த்து வந்தால் வீட்டில் நல்ல ஆற்றல்கள் பெருகும் என்பது ஐதீகம். துளசியில் கற்பூரவள்ளி என்று கூறப்படும் துளசியையும் வீட்டில் வளர்ப்பது ராஜ யோகத்தை தரும்.

தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுபவர்களுக்கு சளி தொல்லை என்பதே ஏற்படாது. துளசி மற்றும் கற்பூரவள்ளி இந்த இரண்டு செடிகளையும் வீட்டில் தாராளமாக அனைவரும் வளர்த்து வரலாம். மேலும் துளசியுடன் வளர்க்க வேண்டிய அற்புதமான செடி வகை ஒன்று உள்ளது. அதை துளசிச் செடியுடன் சேர்த்து அல்லது பக்கத்தில் வைத்து வளர்த்து வந்தால் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

karpooravalli

முந்தைய காலத்தில் இந்தச் செடி வகை அனைவருக்கும் பிடித்தமான செடி வகையாக வீட்டில் வளர்த்து வந்தனர். ஆனால் இப்போது இந்த செடியை பலரும் அபூர்வமாகத்தான் பார்த்து வருகின்றனர். குழந்தைகள் அதிகம் விரும்பும் இந்தச் செடியை துளசியுடன் சேர்த்து வளர்த்தால் கிடைக்கும் நன்மைகள் சொல்லில் அடங்காதவை. துளசியுடன் இந்த செடியை வளர்த்தால் வீட்டில் நல்ல ஆற்றல் பெருகும். உங்களுடைய சிந்தனைகள் தெளிவாகும். அத்தகைய செடி வகையை பற்றிய ரகசியத்தை இனி தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

சிறுவயதில் அனைவரும் அதிசயமாக வியந்து பார்த்த ஒரு செடி வகை என்றால் அது தொட்டாசினுங்கி. இதன் இலைகளைத் தொட்டால் அது நானப்பட்டு சுருங்கி விடுமாம். அதனை பார்ப்பதற்கு நமக்கு மெய் சிலிர்க்கும் வண்ணம் இருக்கும். குழந்தைகள் இதனை அடிக்கடி தொட்டுப் பார்த்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். இந்தச் செடி வகை இப்போது வீட்டில் வளர்ப்பது அரிதாகிவிட்டது. உண்மையில் தொட்டாசினுங்கியும் தெய்வீக மூலிகை வகை தான்.

thotta-sinungi1

தொட்டாசினுங்கி துளசியுடன் சேர்த்து வளர்த்தால் நிறைய நன்மைகள் உண்டாகும். இதனை தனித்தனியாக வளர்த்தாலும், அருகருகே வைத்து வளர்த்து வாருங்கள். நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்கும். வெற்றிலையுடன் ஏதாவது ஒரு செடி வகை சேர்த்து வளர்த்தால் நல்லது நடக்கும். தனியாக வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். அதுபோல துளசியுடன் இணைந்த தொட்டாசினுங்கி நேர்மறை ஆற்றல் வெளிப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. சிறிய தொட்டியில் சிறியதாக வளர்த்தாலே போதும். புதர் போல் படர்ந்து வளர விட்டுவிடாதீர்கள் அடிக்கடி வெட்டிவிட்டு சிறியதாக அழகாக வளர்த்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
என்னதான் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடுகிறதா? செவ்வாய் கிழமை இப்படி தீபம் ஏற்றுங்கள் கையில் காசு புழங்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.