வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை நீக்க உதவும் தும்பை பூ.

sivan nanthi
- Advertisement -

துன்பம் இல்லாத மனிதன் என்று இந்த உலகில் யாரும் இல்லை. அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பம் என்பது இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு நமக்கு அருள் புரியும் தெய்வமாக சிவபெருமான் விளங்குகிறார். அதுவும் பிரதோஷ நாளன்று சிவபெருமானை எந்த பூவை வைத்து வழிபட்டால் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

முப்பெரும் தேவர்களுள் ஒருவராக திகழக் கூடியவர் தான் சிவபெருமான். சிவபெருமானுக்குரிய தினமாக பிரதோஷம் விளங்குகிறது. பிற தோஷங்கள் நீங்க பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே. அப்படிப்பட்ட பிரதோஷ நாளன்று விரதம் இருந்து சிவாலயத்திற்கு சென்று அங்கு மாலை நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை கலந்து கொண்டு சிவபெருமானை வழிபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் வீட்டிலேயே அந்த பிரதோஷம் வேளையில் வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். எந்த முறையில் வழிபாடு செய்தாலும் உண்மையான தூய அன்புடன் சிவபெருமானை வழிபடும் பொழுது அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான பூக்கள் உகந்த பூக்களாக கருதப்படுகிறது. அந்த வகையில் சிவபெருமானுக்கு உகந்த பூவாக இருக்கக்கூடியது தான் தும்பை பூ. தும்பை என்ற ஒரு முனிவரின் மனைவி சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் இருந்தார். அப்பொழுது சிவபெருமானும் காட்சியளித்து வரத்தை கேட்கும் பொழுது உங்கள் காலடியில் நான் என்றென்றைக்கும் இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக என் காலடியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டு விட்டார். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார்.

அதனால் தான் இன்றளவும் தும்பை பூவை சிவபெருமானின் தலைக்கு மேல் தான் அனைத்து ஆலயங்களிலும் வைப்பார்கள். சிவபெருமானின் பாதத்தில் வைக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட தும்பை பூவை பிரதோஷ நாளன்று நாம் மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சூட்டி வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கும். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த தும்பை பூ மருத்துவ ரீதியாகவும் பல நற்குணங்களை பெற்ற பூவாக திகழ்கிறது.

- Advertisement -

கடன் துன்பம் நீங்க:
கடன் என்ற பெருதுன்பம் நம் வாழ்வில் இருந்து நீங்குவதற்கு பிரதோஷ நாளன்று அருகம்புல்லை நந்தி பகவானின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் வைத்து வழிபட்டு வரவேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நந்தி பகவான் கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கையை நமக்கு அருள்வார்.

நோய்கள் தீர:
ஆரோக்கியமான உடலை பெறுவதற்கும் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயிலிருந்து விடுபடுவதற்கும் பிரதோஷ நாளன்று அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆலயத்தை வலம் வருவார்கள். அவ்வாறு வலம் வரும்பொழுது ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலும் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் தீப ஆராதனை காட்டப்படும். அதிலும் குறிப்பாக கன்னி மூலையில் தீப தூப ஆராதனை காட்டும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வழிபட்டால் சிவபெருமானின் அருளால் நோய்கள் படிப்படியாக நிவர்த்தி அடையும்.

இதையும் படிக்கலாமே : தீராத துன்பம் தீர்க்கும் சமயபுரத்து மாரியம்மன் வழிபாடு

நாளை வெள்ளிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளன்று சுக்கிர பகவானுக்கு உகந்த வெள்ளை நிறத்தில் ஆன சிவபெருமானுக்குரிய தும்பை பூவை வைத்து வழிபட்டு நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் நீக்கி இன்பமான வாழ்க்கையை வாழ்வோம்.

- Advertisement -