- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீரா துன்பம் போக்கும் தும்பை பூ

தீரா துன்பம் போக்கும் தும்பை பூ

- Advertisement -

தும்பை பூ சிவன் மற்றும் விநாயகருக்கு உகந்த பூவாக இருக்கிறது. இந்த தும்பை பூ அளவில் மிகவும் சிறியது என்றாலும், அழகில் குறைவில்லாதது. வெண்ணிறமான மென்மையான இதழ்களை கொண்டுள்ள இந்த தும்பை பூ, நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய துயரங்கள் அத்தனையையும் தீர்க்க வல்லது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த தும்பை பூ பற்றிய சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தும்பை பூ கொண்டு சிவனை அலங்கரிக்கும் பொழுது, எம்பெருமான் சிவனுடைய அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கிறது. முன்னொரு காலத்தில் தும்பை என்கிற ஒரு சிவ பக்தை சிவனின் மீது பேரன்பு கொண்டு பக்தியோடு இருந்திருக்கிறாள். அவள் தர்ம நெறியோடு எப்பொழுதும் நேர்மை தவறாமல் நடப்பவளாக இருப்பாள். அவளின் நேர்மையை சோதிக்க சிவன் திருவிளையாடல் புரிய, அதில் தும்பை வெற்றி பெற்றுவிட்டாள்.

- Advertisement -

தும்பையின் நேர்மையைக் கண்டு அவளுக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான், என்ன வரம் வேண்டும்? என்று கேட்க தும்பை, சிவனை நேரில் கண்ட பதற்றத்தில் கேட்க வேண்டிய வரத்தை மாற்றி கேட்டு விட்டாள். எல்லோருக்கும் ஈசனின் திருவடியில் இருப்பதையே வரமாக கேட்க வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கும் ஆனால் ஈசனின் திருமுடியில் அதாவது தலை மீது தன் திருவடி இருக்க வேண்டும் என்று மாற்றி தும்பை வரம் கேட்டு விட்டதால் செய்வதறியாது திகைத்தாள்.

ஈசனிடம் நான் உங்களை கண்ட பதற்றத்தில் வரத்தை மாற்றி கேட்டு விட்டேன். என்னை மன்னித்து எண்ணிய வரத்தை கொடுக்கும்படி கேட்டாள், ஆனால் சிவன் நீ கேட்ட வரமே உனக்கு கிடைக்கும் என்று அடுத்த பிறவியில் அவளை தும்பை பூவாக படைத்தார். ஈசனின் திருமுடியை அலங்கரிக்க தும்பை பூவை இன்றும் பயன்படுத்துவார்கள். தும்பையின் திருவடியானது இப்பொழுது ஈசனின் தலை மீது அவள் கேட்டபடி காலத்திற்கும் வரமாக இருக்கப் பெற்றது.

- Advertisement -

மென்மையான இந்த வெண்மை நிற தும்பை மலரை கொண்டு மாலை செய்து ஈசனுக்கு சாற்றி வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கக் கூடிய தீராத அத்தனை துன்பங்களும் உடனே தீரும் என்பது நியதி. முன்பெல்லாம் மன்னர்கள் போர் புரிய செல்லும் போது தும்பை மாலையை அணிவார்கள். தும்பை மாலை அணிந்தால் போருக்கு தயார் என்பது அர்த்தமாகும். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துயர் என்கிற போரை நீக்க, சிவனுக்கு தும்பை மாலையை சாற்றுங்கள். தும்பையை பெரிய மாலையாக நீங்கள் சாற்றாவிட்டாலும், தும்பை பூவை கோர்த்து மலர்ச்சரமாக தினமும் வைத்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
நாளை கந்த சஷ்டி விரதத்தின் 4வது நாள் முருகன் வழிபாடு

சிவ பூஜையில் எப்பொழுதும் தும்பைக்கு தனி இடம் உண்டு. தும்பை மலர் மற்றும் கொன்றை மலர் ரெண்டுமே சிவனுக்கு உகந்த பூக்கள்! அதில் தும்பை பூ விசேஷமானது. இந்த தும்பை மலரை திங்கள் அல்லது பிரதோஷ நாட்களில் தவறாமல் சிவனுக்கு சாற்றி வீட்டிலேயே எளிமையாக வழிபடுங்கள். உங்களுடைய தீரா பிரச்சனைகள் அனைத்தும் நிச்சயம் தீரும். தும்பை பூவை விநாயகருக்கும் அர்ச்சனை செய்வது உண்டு. விநாயகருக்கு தும்பை பூவை சாற்றி வர விக்னங்களை தீர்த்து வைப்பார். தும்பை பூவை நீரில் அலசி ஊசியில் கோர்த்து மலர்ச்சரமாக்கி, சிவனுக்கு சாற்றி, சிவ மந்திரங்கள் ஜெபித்து, “ஓம் நமச்சிவாய” என்னும் நாமத்தை உச்சரித்து வழிபடுங்கள், எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிட்டும்.

சற்று முன்