மனிதன் வாழும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறான். இது ஒவ்வொரு மனிதனுக்கு வேறுபடுமே அன்றி துன்பம் நிச்சயம் இருக்கும். இந்த பிறப்பில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் நம் முற்பிறப்பின் கர்மபலன் என்று சொல்லப்படுகிறது. எப்படி இருப்பினும் இந்த துன்பத்திலே மூழ்கி போய் விடாமல் அதிலிருந்து மீண்டு வெளியே வர வேண்டும்.
இதற்கு நம்முடைய மனதைரியத்துடன் சேர்த்து தெய்வத்தின் அனுகிரகமும் நிச்சயம் தேவை. அதை அனுகிரகம் செய்ய கூடிய தெய்வமாக விளங்குபவர் துர்க்கை அம்மன். உலகிற்கு தாயாகிய இந்த ஆதிசக்தி துன்பம் என்று வந்தவர்களின் துயரை தீர்க்கும் பெரும் சக்தியாக விளங்குகிறார். அந்த ஆதிசக்தியை எப்படி வணங்கினால் நம் துன்பம் தீரும் என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
துன்பம் தீர துர்க்கை வழிபாடு
இந்த வழிபாட்டை நாம் செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் நம் வீட்டிலேயே இந்த வழிபாடு செய்யலாம். இப்போது அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை செய்ய நமக்கு துர்க்கை அம்மனின் படம் தேவை. இந்த படத்தை பூஜை அறையில் வைத்து குங்கும பொட்டு வைத்து மலர் சூட்டிய பிறகு ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதல் நிறைய மல்லிகை பூவை பரப்பி வைத்து விடுங்கள். அடுத்து ஒரே ஒரு கிழங்கு மஞ்சள் எடுத்து அதில் குங்கும பொட்டு வைத்து அதை இந்த மல்லி பூவின் நடுவில் வைத்து விடுங்கள்.
இத்துடன் செந்தாமரை மலர் கிடைத்தால் அதையும் வைக்கலாம். இவையெல்லாம் செய்த பிறகு தட்டை துர்க்கை அம்மன் படத்திற்கு முன்பாக வைத்து விட்டு ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது இந்த தீபத்தின் முன் அமர்ந்து உங்கள் துன்பங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் துர்க்கையாய நமக
என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை நீங்கள் சொல்ல சொல்ல உங்களுடைய துன்பங்கள் எல்லாம் விலகி போவதை நீங்களே உணர முடியும். துர்கை என்றாலே துன்பங்களை தீர்ப்பவள் என்று பொருள். அந்த துன்பம் பிறரால் வருவதாக இருக்கட்டும் அல்லது வேற காரணமாக இருக்கட்டும் அதை அழிப்பதில் அன்னைக்கு நிகர் யாரும் இல்லை.
இதையும் படிக்கலாமே: இந்த இரண்டு இலைகள் இருந்தால் என்றுமே நம்மிடம் பணம் நிரந்தரமாக இருக்கும்.
இத்தகைய சக்தி வாய்ந்த இந்த அம்மன் வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே வழிபட்டு உங்களுடைய தீராத துன்பத்தை தீர்த்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையுங்கள்.