ராகு தோஷம் நீங்க காளி வழிபாடு

Pray Kali Maa
- Advertisement -

தெய்வங்களில் சில தெய்வங்கள் உக்கிரமாகவும், சில தெய்வங்கள் சாந்தமாகவும், இருப்பார்கள். இவர்களில் நம்முடைய வழிபாடுகளில் சாந்தமான கடவுள்களை மட்டும் வணங்கி வருகிறோம். உக்கிரமான தெய்வங்களை நாம் வணங்க கூடாது. இதற்கு காரணம் ஏதேனும் வேண்டுதல் பரிகாரத்திற்கு மட்டுமே வணங்க வேண்டும் என்பன போன்ற தவறான கருத்துக்கள் நம்மில் பலருக்கும் உண்டு. அப்படி நாம் பயப்படும் உக்கிரமான தெய்வங்களில் ஒருவர் தான் இந்த மகாகாளி.

பெரும்பாலும் இந்த அன்னையை அனைவரும் பயத்துடன் தான் பார்ப்பார்களே அன்றி பக்தியுடன் பார்ப்பது குறைவு. இதற்கு காரணம் அவருடைய உக்கிரமான தோற்றம் தான். உக்கிரமான தெய்வங்கள் தான் மிகவும் கருணை உள்ளம் கொண்ட தெய்வங்களாக இருப்பார்கள். அந்த வகையில் கருணை உள்ளம் கொண்ட தாய்மை உணர்வு மிக்க இந்த காளி அன்னையை எந்த நேரத்தில் வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் நீரும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

துன்பங்கள் தீர காளி வழிபாடு

பத்ரகாளி, மகாகாளி என்று பெயர்களை கொண்ட இந்த காளியம்மனை பார்த்தாலே ஒருவித நடுக்கம் தோன்றும். அதுமட்டுமின்றி இந்த காளியம்மனை வணங்குவது நம்முடைய எதிரிகள் தொல்லை நீங்க தீய சக்திகள் ஒழிக மாந்திரீகம் போன்றவற்றிற்காக மட்டுமே என்று பலரும் நினைக்கிறார்கள் அப்படி கிடையாது.

மகாகாளி என்றாலே காலத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடியவர் என்று பொருள். அப்படியான தெய்வத்தை நாம் எப்போது வணங்கினாலும் தவறில்லை. நம்முடைய சிறு சிறு துன்பத்திலிருந்தும் நம்மை காக்க கூடியவர் இந்த அன்னை. அது மட்டும் இன்றி கூப்பிட்ட குரலுக்கு உடனே வந்து நிற்கக் கூடிய கால தேவதையும் அவரே. அப்படியான காளியின் சொருபம் தான் துர்க்கை அம்மன்.

- Advertisement -

காளி வழிபாட்டை பலரும் பயத்தால் தவிப்பதால் தான் துர்க்கை அம்மனை வணங்கி வருகிறார்கள். துர்க்கை அம்மனுக்கு எப்படி ராகுகால வழிபாடு சிறந்ததோ அதே போல் தான் காளிக்கும். ஏனெனில் இருவரும் ஒருவர் தானே. ஆனால் இந்த துர்க்கை அம்மனையும் காளியம்மனையும் ராகு காலத்தில் வணங்குவது சிறந்ததுசொல்லப்படுகிறது. அது உண்மையும் கூட ஏன் நாம் இவர்களை இந்த நேரத்தில் வணங்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகத்திற்குரிய அதிபதி தெய்வமாக ஒரு தெய்வம்ஸஉண்டு. அது போல ராகுகான அதிபதி தெய்வமே காளி தான். அப்படி இருக்கும் பட்சத்தில் ராகுவினால் ஏற்படும் பாதிப்பு தோஷங்களுக்கு காளி அம்மன் ராகு காலத்தில் வணங்குவது நல்ல பலனை தரும். துர்க்கை அம்மனை ராகு காலத்தில் நாம் வழிபாடு செய்வதற்கான காரணமும் இது தான்.

- Advertisement -

இந்த ராகுவின் பாதிப்பு மட்டுமின்றி நம் வாழ்க்கையில் தோன்றும் சிறிய பெரிய இன்னல்கள் அனைத்திலிருந்தும் காக்கும் அன்னைகளான இவர்களை இந்தக் காரணத்தினால் தான் ராகு கால நேரத்தில் வணங்குகிறார்கள்.இந்தகைய சக்தி வாய்ந்த இந்த அன்னையை ராகுகால நேரத்தில் வழிபட்டு நம் வாழ்க்கையில் இருக்கும் சகல தோஷங்கள் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: வீடு கட்டும் யோகத்தைத் தரும் வாழைமர பரிகாரம்

இவர்களை ராகு கால நேரத்தில் வணங்குவது சிறப்பு என்றாலும், மற்ற எந்த நேரத்தில் மனதார இவர்களை நினைத்து வணங்கினாலும் உடனே நம்முடைய இன்னல்களை தீர்த்து வைப்பார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உள்ள தீராத பிரச்சனைகள் தீர இந்த அன்னையை வணங்கி நல்ல முறையில் வளமாக வாழுங்கள்.

- Advertisement -