தீராத பிரச்சனைகள் தீர ஏற்ற வேண்டிய தீபம்

sivan rudrasha dheepam
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஏன் தான் வாழ்கிறோமோ என்ற மனவேதனையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் வேதனைகள் பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு சிலர் அதில் மன உறுதியுடன் போராடி மீண்டு வந்து விடுவார்கள். இன்னும் சிலர் அதிலே உழன்று என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து கொண்டிருப்பார்கள். இந்த துன்பங்களும் ஓரளவிற்கு இருக்கும் போது தான் நம்மால் அதை எதிர்த்து போராடவும் முயற்சி செய்யவும் முடியும்.

சில நேரங்களில் நம்மையும் மீறி நடக்கும் செயல்களுக்கு எல்லாம் நாம் இறைவனைத் தவறு வேறு யாரை சரணடைய முடியும்.
இப்படி தினம் தினம் போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எம்பெருமான் சிவபெருமானை நினைத்து இந்த தீபத்தை ஏற்றினால் அவை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரச்சனைகள் துன்பங்கள் தீர ருத்ராட்ச தீபம்

இந்த தீப வழிபாட்டை நீங்கள் சிவபெருமான் ஆலயம் அருகில் இருந்தால் அங்கு சென்று செய்யுங்கள் மிகவும் விசேஷம் அல்லாத பட்சத்தில் வீட்டில் செய்யுங்கள். இந்த வழிபாட்டை திங்கட்கிழமை செய்வது மிகவும் விஷேசம். ஏனெனில் சிவபெருமானுக்கு உகந்த தினம் அதுதான்.

திங்கட்கிழமையில் வீட்டின் அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்லுங்கள். அப்படி செல்லும் பொழுது கையில் அகல் விளக்கு, நல்லெண்ணெய், பஞ்சுத்திரி, ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் இவை அனைத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு சென்று சிவபெருமானுக்கு முன்பாக இந்த அகல் விளக்கை வைத்து ருத்ராட்சத்தை சேர்த்து தீபம் ஏற்றுங்கள். இந்த விளக்கை சுற்றி ஈசனுக்கு உகந்த வில்வ இலையை கொஞ்சமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

நீங்கள் ஏற்றிய தீபத்தின் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். இந்த மந்திரம் சொல்ல முடியாது என்பவர்கள் சிவாய நமஹ என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு சிவாலயத்தை வலம் வந்து வீட்டிற்கு வந்து விடுங்கள். வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த முறையில் வழிபாடு செய்யும் போது தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

இதே வழிபாட்டை வீட்டிலும் செய்யலாம். வீட்டில் பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றுங்கள். சிவலிங்கம் திருவுருவப்படம் இருந்தால் அவற்றின் முன் வைத்து இந்த விளக்கை ஏற்றலாம் இல்லை என்றால் தீபம் ஏற்றி வைத்து விட்டு சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரங்களை சொல்லுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் தரும் லட்சுமி மந்திரம்

எப்பேர்ப்பட்ட பிரச்சனையில் இருந்தும் நம்மை விடுவிக்க கூடிய ஆற்றல் கொண்டவர் சிவபெருமான். அப்படியான வரை இந்த முறையில் வழிபடும் போது நம்முடைய பிரச்சனைகளை அனைத்தையும் தீர்த்து நல்ல முறையில் நிம்மதியாக வாழ வைப்பார். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -