பெண்கள் சமையலறையில் இவ்வாறான தவறுகளை செய்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் தீராத துன்பம் இருந்துகொண்டேதான் இருக்கும்

kitchen
- Advertisement -

ஒவ்வொருவரின் வீட்டிலும் பூஜை அறை என்ற ஒன்று இருக்கும். ஆனால் இது அனைத்து மதத்தினரின் வீட்டிலும் இருப்பதில்லை. ஒரு சில குறிப்பிட்டவரின் வீட்டில் மட்டுமே இருக்கிறது. ஆனால் சமையலறை என்பது அனைத்து விதமான மக்களின் வீட்டிலேயும் இருக்கின்ற ஒரு இடமாகும். ஒவ்வொரு வீட்டின் இல்லத்தரசிகளும் முழுமையாக ஆட்சி செய்யும் இடம் என்றால் அது சமையலறை மட்டும் தான். அவ்வாறு வீட்டில் ஒரு முக்கியமான இடமாக அமைவது சமையலறை. இந்த சமையல் அறையில் நாம் செய்யும் தவறுகளும், நன்மைகளும் தான் நமது வீட்டிலேயும் நமக்கு பிரதிபலிக்கிறது. எனவே இது போன்ற சில தவறான விஷயங்களை நாம் செய்து விட்டால் நமது குடும்பத்தில் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். வாருங்கள் அப்படி சமையலறையில் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

poojai-room

சமையல் அறை என்றாலே அதில் சமைப்பதுதான் அதிகப்படியான வேலையாக இருக்கும். சமைத்து முடித்த பாத்திரங்களை இரண்டு நாட்கள் ஆனாலும் கழுவாமல், சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் வீட்டில் எப்பொழுதும் கஷ்டம் மட்டுமே நிலவிக் கொண்டிருக்கும். எனவே பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அதேபோல் சமையலறை என்றாலே அங்கு குப்பைகள் அடிக்கடி சேர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த குப்பைகளை நாள்கணக்கில் சமையலறையில் சேர்த்து வைக்க கூடாது. அதேபோல் வீட்டை பெருக்க பயன்படுத்தும் துடைப்பத்தையும் சமையலறையில் வைக்கக் கூடாது. அடுத்ததாக அசைவ உணவுகளை சமைத்து உடன் அந்த அசுத்தங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

kitchen

இவற்றை ஒரு நாள் இரண்டு நாள் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தால் நமது வீட்டில் தெய்வ கடாட்சம் இல்லாமல் போய்விடும். அடுத்ததாக சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பை மண்சட்டி அல்லது பீங்கான் ஜாடியில் மட்டும்தான் வைக்க வேண்டும். அதனையும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் தொடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதேபோல் அசைவம் சமைத்த உடனேயே ஒரு பிடி கல் உப்பை தண்ணீரில் கரைத்து, அந்தத் தண்ணீரை சமையல் அறை முழுவதும் தெளித்து விட்டால் உங்கள் சமையலறை உடனே சுத்தமாக மாறிவிடும். சமைக்கும் பொழுது கை துடைக்க பயன்படுத்தும் கை பிடி துணியை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

broom-thudaippam

பெண்கள் காலையில் எழுந்ததும் குளித்து விட்டு அல்லது முகத்தை கழுவி விட்டு அதன் பிறகுதான் சமையலறைக்குள் செல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் தலைக்கு குளித்து முடித்தவுடன் தலைவிரி கோலத்துடன் சமையலறைக்கு வந்துவிடக்கூடாது. இவ்வாறு நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் அனைத்துமே நமது குடும்பத்தை தான் பாதிக்கும். ஏனென்றால் வீட்டிற்கு வருகின்ற தெய்வங்கள் முதலில் சென்று பார்ப்பதும் சமையலறையை தான். சமையலறையை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்க்கு தெய்வ கடாட்சமும், தெய்வத்தின் அருளும் நமக்குக் கிடைத்துவிடும்.

- Advertisement -