மனவேதனை நீங்க சிவ வழிபாடு

siva linga lady
- Advertisement -

முப்பெரும் தெய்வங்களின் முக்கியமானவராக திகழ்வர் சிவபெருமான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்திலே அவர்களுக்கு முன் தோன்றி அவர்களுடைய துயர்களை ஒன்றுல்லாமல் அழிக்கக் கூடிய அழிக்கும் கடவுள் இவர். அப்படியான சிவபெருமானுக்கு உலகெங்கிலும் பல்லாயிரம் கோடி பக்தர்கள் இருப்பது ஒன்று ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சிவாயா நமக என்ற இந்த ஒரு நாமம் போதும் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் தூள் தூளாகி போவதற்கு. என்ன இருந்தாலும் மனிதர்களுடைய பிரச்சனைகள் ஒன்றும் அத்தனை சாதாரணமானதும் கிடையாது அல்லவா. ஒவ்வொரு பிரச்சனைகளும் ஒவ்வொரு விதமாக நம்மை அழுத்தி ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

- Advertisement -

அந்த நேரங்களில் நாம் அவரை சரணடைந்து விட்டாலே போதும் நம் துன்பங்கள் அனைத்தும் காணாமல் போய் விடும். இருப்பினும் அந்த சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய சில சூட்சம வழிபாடுகளும் உள்ளது. அதைப் பற்றியதொரு தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மன வேதனை தீர சிவாலயத்தில் செய்ய வேண்டியது

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் மனிதனுக்கு துன்பங்களோ துயரங்களோ சொல்லிக் கொண்டு வருவதில்லை. நன்றாக இருப்போம் திடீரென ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது நம் மனமே கூட ஏதோ சோர்ந்து போயிருக்கும்.

- Advertisement -

அந்த நேரத்தில் எல்லாம் இதை செய்தால் உடனே பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்லுங்கள. செல்லும் போது கையில் ஒரு நோட்டு அல்லது பேப்பர் மற்றும் பேனாவை கொண்டு செல்லுங்கள். இதற்கு எந்த நிறத்திலான பேனா வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.

அங்கு சென்று சிவ தரிசனத்தை செய்த பிறகு ஆலயத்தை வளம் வந்து ஏதேனும் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து சென்று இருக்கும் நோட்டில் ஓம் நமோ நமசிவாய என்ற சிவ மந்திரத்தை 108 முறை எழுதுங்கள். அதன் பிறகு இந்த எழுதிய பேப்பர், நோட் கோவில் உண்டியலில் போடலாம் அல்லது உங்கள் வீட்டில் கொண்டு வந்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம். உங்களுடைய துன்ப காலத்தில் இதை செய்யும் பொழுது உடனடியாக பலன் கிடைக்கும். வீட்டின் அருகில் சிவாலயம் இல்லை வீட்டில் செய்யலாமா? என்பவர்களும் செய்யலாம். அதற்கான வழிமுறை வேறு. வீட்டில் செய்பவர்கள் திங்கட்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இதை செய்ய வேண்டும்.

அப்போது வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி விட்டு விளக்கின் முன் அமர்ந்து ஓம் சிவாய நமக என்ற இந்த மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும். அதன் பிறகு இதே போல் இந்த பேப்பரையும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் அல்லது நீங்கள் எங்கேயும் சிவாலயம் செல்லும் போது அங்கு சென்று உண்டியலில் போடலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ சுக்கிர வழிபாடு

கோவிலில் அமர்ந்து எழுதக் கூடிய மந்திரம் வேறு, வீட்டில் அமர்ந்து எழுதக் கூடிய மந்திரம் வேறு, அதை மட்டும் சற்று கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு உங்களின் தீராத பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து மன அமைதியுடன் நிம்மதியாக வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

- Advertisement -