உங்கள் வீட்டில் தொடர்ந்து துன்பம் வந்து கொண்டிருக்கிறதா? அப்போது வெள்ளி செவ்வாய்க் கிழமையில் நிச்சயம் இந்த பொருள் வாங்குவதை தவிர்த்து பருங்கள்

lakshmi
- Advertisement -

குடும்பம் செழிக்க ஒவ்வொரு வீட்டிலும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்க வேண்டும். அந்த வீடு மன நிம்மதியுடன் சுபிட்சமாக இருக்க வேண்டும். எனவே நமது முன்னோர் காலத்திலிருந்து இன்று வரை சில சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. அவ்வாறு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சில பொருட்களை வாங்குவதன் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும் என்றும், அதே மாதிரி சில பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பங்கள் நம்மை நெருங்காமல் தவிர்க்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. அவ்வாறு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வாங்க கூடாத அந்த முக்கியமான பொருள் என்ன என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

shop

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீடு துடைக்க கூடாது, வீட்டை சுத்தம் செய்யக்கூடாது, பூஜை அறையைச் சுத்தம் செய்யக்கூடாது, பூஜை பொருட்களையும் சுத்தம் செய்யக்கூடாது, அதுமட்டுமல்லாமல் அன்றைய தினங்களில் வீட்டில் உள்ள பொருட்களை மற்றவருக்கு தானமாகவோ, கடனாகவோ கொடுக்கக் கூடாது.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள அதிர்ஷ்டம் நம்மை விட்டு விலகிவிடும். மற்றவர்களுக்கு பொருட்களை இன்றைய தினங்களில் தானம் கொடுப்பதன் மூலம் நமது அதிர்ஷ்டம் அவர்கள் வீட்டிற்கு சென்று விடும். எனவே இன்று வரையிலும் பலரும் இவற்றையெல்லாம் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வாறு இந்த செவ்வாய் வெள்ளி, கிழமைகளில் சில பொருட்கள் வாங்குவதென்பதை தவிர்த்து விட்டால் வீட்டின் சூழ்நிலைக்கு அவை மிகவும் நன்மையை கொடுக்கிறது.

vasthira-dhanam1

மகாலட்சுமி 108 பொருட்களை வாசம் செய்வதாக கருதப்படுகிறது. அதில் முக்கிய பொருட்களில் ஒன்றாக துடைப்பம் இருக்கிறது. துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த துடைப்பத்தை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் உங்களுக்கு பண விரயம் அதிகமாகிறது. எனவே துடைப்பத்தை மற்றவர்களின் உபயோகத்திற்கு கொடுத்தாலும் அதனை உடனே திரும்ப வாங்கி விட வேண்டும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு செல்லும் பொழுது உபயோகித்த துடைப்பத்தை அந்த வீட்டிலேயே வைத்துவிட்டு சொல்லக்கூடாது. அதனை புதிய வீட்டிற்கும் கொண்டு செல்லக்கூடாது. இந்த துடைப்பதில் பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்திருந்தால் அவற்றை மட்டும் தனியாக எடுத்து விட்டு துடைப்பத்தை மட்டும் மண்ணில் புதைத்து விட வேண்டும். அல்லது தீயில் எரித்து விட வேண்டும்.

broom-thudaippam

இப்படி தான் உபயோகித்ததுன துடைப்பத்தை பழைய வீட்டிலேயே விட்டு விட்டு வந்தாலோ அல்லது வெளியில் தூக்கி எறிந்தாலோ நமது வீட்டிலிருக்கும் அதிர்ஷ்டம் வெளியேறி விடும். அவ்வாறு இந்த துடைப்பத்தை வீட்டின் செருப்பு வைக்கும் இடத்திலும் வைத்து விடக் கூடாது. இது மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதனைச் செருப்பு வைக்கும் இடத்திற்க்கு அருகில் வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்காமல் போய்விடும்.

bedroom

வீட்டின் கன்னி மூலை, வரவேற்பறை, படுக்கையறை இது போன்ற இடங்களிலும் துடைப்பத்தை வைத்து விடக் கூடாது. அத்துடன் இந்த துடைப்பத்தை புதியதாக வாங்க வேண்டும் என்றால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வாங்கி விடக்கூடாது. என்னதான் துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்பட்டாலும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் இதனை வாங்குவதன் மூலம் வீட்டில் பலவித குழப்பங்களும், பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே இந்த கிழமைகளில் துடைப்பம் வாங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

- Advertisement -