துன்பங்களும், பிரச்சனைகளும், கஷ்டங்களும் இல்லாத நபர் என்று யாரும் இல்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்யும். ஒரு சில குடும்பங்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட பல பிரச்சினைகளும் கஷ்டங்களும் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் கஷ்டங்கள் நீங்குவதற்கு அந்த குடும்பப் பெண்கள் எந்த முறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீபத்திற்கு என்று அற்புதமான சக்தி இருக்கிறது. தீபச்சுடர் ஒளியை பார்த்து மனதார நாம் எதை வேண்டுகிறோமோ அதை கொடுக்கும் ஆற்றல் அந்த தீபத்திற்கு இருக்கிறது என்பதால் தான் நம் முன்னோர்கள் அன்றைய காலத்திலேயே வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தீபச்சுடர் ஒளியில் தெய்வத்தை ஆகர்ஷணம் செய்து வழிபடும் முறைகளும் இருக்கிறது. அந்த வகையில் தான் வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து விதமான துன்பங்களும் பிரச்சனைகளும் நீங்குவதற்கு நாம் தீபத்தை வைத்து வழிபாடு செய்யப் போகிறோம்.
இந்த வழிபாட்டை குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தான் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்று மாலை 6:30 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு புதிதாக வாங்கிய அகல் விளக்கு தேவைப்படும். அடுத்ததாக மூன்று இனுக்கு வேப்பிலை வேண்டும். வேப்பிலையை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே பறித்து வைத்து விட வேண்டும்.
மூன்று இனுக்கையும் முக்கோண வடிவில் வைத்து அதற்கு நடுவில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நிலை வாசலுக்கு வெளியே வைத்து ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றும் பொழுது அந்த அகலில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபமானது வீட்டை பார்த்தவாறு எரிய வேண்டும். பிறகு அந்த தீபத்திற்கு பின்னால் தீபம் ஏற்றிய பெண்கள் சென்று அமர்ந்து அந்த தீபத்தை பார்த்து குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அதை அனைத்தையும் சொல்லி அவை அனைத்தும் நீங்க வேண்டும் என்று வழிபட வேண்டும்.
இந்த தீபம் குறைந்தது 20 நிமிடமாவது எரிய வேண்டும். தீபம் எரிந்து முடித்த பிறகு அந்த அகல் விளக்கியும் அதன் அடியில் இருக்கக்கூடிய வேப்பிலையும் எடுத்துக்கொண்டு மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் போய் அகலை உடைத்து விட வேண்டும். பிறகு வீடு திரும்பி வந்து ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து வீட்டை மூன்று முறை சுற்றி அந்த கல்லுப்பையும் எந்த இடத்தில் அகலை போட்டு உடைத்தார்களோ அந்த இடத்தில் கொண்டு போய் அகலின் மேல் போட்டு விட வேண்டும்.
பிறகு கை கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வரலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் அகல் விளக்கு உடைய கூடாது என்பதால் முந்தைய நாளே அகலை வீட்டிற்குள் இருந்து எடுத்து வெளியில் வைத்து விட வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 27 நாட்கள் செய்ய வேண்டும். 27 நாட்களும் புது அகல் விளக்கை தான் பயன்படுத்த வேண்டும். 28 வது நாள் ஏதாவது ஒரு இனிப்பை செய்து குடும்பத்துடன் சாப்பிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர செம்பருத்திப்பூ பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்கள் செய்யும் பொழுது அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்.