தெரியாமல் துணிமணிகளில் பட்டுவிடும் விடாப்பிடியான இந்த கரைகளை கூட வீட்டிலேயே சுலபமாக எப்படி நீக்குவது? என்ற ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கனுமா?

cloth-stain
- Advertisement -

சில சமயங்களில் நாம் உடுத்தும் துணிமணிகளை தெரிந்தோ! தெரியாமலோ! விடாப்பிடியான கறைகள் பட்டுவிடும். அதனை நீக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். என்னதான் விலை உயர்ந்த டிடர்ஜென்ட் பவுடர்கள் வாங்கி உபயோகித்தாலும் இந்த மாதிரியான விடாப்பிடியான கறைகளை நீக்கும் சக்தி அதற்கு இருப்பதில்லை. நீங்கள் பிரஷ் வைத்து அதிகம் தேய்த்தால் துணி தான் பாழாகி போய்விடும். அதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக எப்படி நீக்கி மீண்டும் புத்தம் புதிய ஆடையை போல் மாற்றுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

blood-stain-in-cloth

சில சமயத்தில் வீட்டில் இருக்கும் பொழுது தெரிந்தோ தெரியாமலோ கைகளை வெட்டிக் கொண்டு விடுவோம். இதனால் ஏற்படும் ரத்தக் கறைகள் துணியில் படிந்தால் அதனை உடனே தண்ணீரில் டிடர்ஜெண்ட் போட்டு நனைத்து விட வேண்டும். இல்லையென்றால் காய்ந்து போய் விடாப்பிடியாக மாறிவிடும். அந்தக்கறை வெகு சீக்கிரத்தில் போகவே போகாது. அதுவும் காட்டன் துணிகளில் எல்லாம் பட்டால் அவ்வளவு தான்.

- Advertisement -

நீங்கள் என்னதான் செய்தாலும் அதனை நீக்க முடியாது. அந்த துணியை தூக்கி போட வேண்டியது தான். இப்படியான நேரத்தில் இதை செய்து பாருங்கள். ஜில்லென்று இருக்கும் குளிர்ந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த உப்பு கலந்த தண்ணீரில் சுமார் 2 மணி நேரம் அளவிற்கு அந்தத் துணியை ஊறவைத்து பின்னர் துணி துவைக்கும் சோப்பு பயன்படுத்தாமல், குளிக்கும் சோப்பை கறைப்பட்ட இடத்தில் லேசாக தேய்த்தால் போதும் ரத்தக்கறை எளிதாக நீங்கிவிடும்.

soap-bar

டீ, காபி போன்ற பானங்கள் அருந்தும் பொழுது துணிகளில் பட்டுவிட்டால் அந்த கறை உடனே நீங்குவதில்லை. இதற்கு சிறிதளவு வினிகரை கறைப்பட்ட இடத்தில் தடவிவிட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் பேக்கிங் சோடா சிறிதளவு சேர்த்து, குளியல் சோப்பு பயன்படுத்தி லேசாக பிரஸ் போட்டு தேய்த்து விடலாம். டீ, காபி கறைகள் எளிதாக நீங்கிவிடும்.

- Advertisement -

மருதாணி, குழம்பு போன்ற விடாப்பிடியான கறைகள் துணிகளில் படிந்து இருந்தால் அதனை நீக்குவதற்கு கொதிக்க வைத்த பால் பயன்படுத்தி பார்க்கலாம். சிறிதளவு கொதிக்க வைத்த பாலில் கறைப்பட்ட இடத்தை மட்டும் அமுக்கி, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் குளிக்கும் சோப்பு பயன்படுத்தி லேசாகத் தேய்த்தால் போதும். அந்த கறை எளிதாகவே நீங்கிவிடுகிறது. இதற்காக அதிக சிரமப்பட தேவையில்லை.

henna-stain

கரைகள் மட்டுமில்லாமல் புதிதாக வாங்கும் துணிமணிகளில் இருக்கும் ராசாயன நிறங்கள் இன்னொரு ஆடையுடன் சேரும் பொழுது சாயம் போய் அந்த ஆடை வீணாக போய் விடுகிறது. இப்படி நிறம் போகும் ஆடைகளை எப்பொழுதும் தனியாக தான் துவைக்க வேண்டும். இதற்கு புதிதாக வாங்கும் துணியை ஒருமுறை வெறும் தண்ணீரில் அலசி காய வைத்து விட்டு பயன்படுத்துவது நல்ல பலன் தரும். சரி இந்த கரையை எப்படி போக்குவது என்று பார்ப்போம். அந்த துணியை மட்டும் தனியாக கொஞ்சம் கொதிக்கும் சுடு தண்ணீரில், ஒரு தேக்கரண்டி அளவிற்கு டிடர்ஜென்ட் பவுடர் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து பின்னர் சாதாரணமாக துவைத்து எடுத்தால் போதும். சாயம் நீங்கி பழைய நிலைக்கு துணி கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே
அடிக்கடி பார்க்க வேண்டிய ஒரு விஷயம்? இதை பார்ப்பதால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? இப்படி மட்டும் செய்தால் வாழ்க்கை இனிமை தான்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -