அடிக்கடி பார்க்க வேண்டிய ஒரு விஷயம்? இதை பார்ப்பதால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? இப்படி மட்டும் செய்தால் வாழ்க்கை இனிமை தான்!

sky-sad-man

இந்த உலகத்தில் சில விஷயங்களை உற்று நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஷயங்களை எல்லாம் செய்ய பழகிக் கொண்டால் வாழ்க்கையே இனிமையாக மாறிவிடும். அந்த வகையில் ஒரு சில விஷயங்கள் நமக்கு ஆச்சரியத்தை கூட ஏற்படுத்தும். விலங்குகள், பறவைகள், தாவரங்கள் செய்யும் சில விஷயங்களை உற்றுநோக்கினால் நமக்குத் தேவையான இன்னொரு விஷயங்கள் கிடைக்கும். காட்டு ஜீவராசிகள் முதல் வீட்டு ஜீவராசிகள் வரை அனைத்தும் செய்யும் விளையாட்டுக்கள் நமக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தரும். அப்படியான சில விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sunny

உங்களுடைய மனம் குழப்பமாக இருக்கும் பொழுது அடிக்கடி இந்த விஷயத்தை பார்த்தால் எவ்வளவு குழப்பம் இருந்தாலும் தெளிவு பிறக்கும். அதுதான் பரந்து விரிந்த நீலவானம். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். வானத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் வாழ்க்கையை நீங்கள் உணர முடியும். இன்னும் எவ்வளவோ விஷயங்களை கடக்க வேண்டி இருக்கிறது? என்கிற புலம்பல் இருக்கும் பொழுது, வானத்தைப் பார்த்தால் இவ்வளவு தான் வாழ்க்கை என்று தோன்றி விடுவதை உணரலாம். உங்களை அறியாமலேயே உங்களுக்குள் தெளிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.

உலகில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களில் முதல் விஷயமாக இருப்பது நீச்சல்! என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்குமா? ஆமாங்க! நீச்சல் அடிக்க பழகிக்கோங்க. அடிக்கடி மீன்கள் போல நீங்கள் நீச்சல் அடிக்கும் பொழுது, மனம் லேசாவதை உணரலாம். நீச்சல் அடிப்பவர்கள், பூமியில் நடக்கும் பொழுதும் உங்களை மீன்களாக உணரலாம்.

உங்கள் வீட்டில் பூனை இருந்தால் அது எங்கு அதிகமாக தூங்குகிறது என்று பாருங்கள். பூனை அமைதியான இடத்தில் தான் தூங்கும். அது தூங்கும் இடத்தில் ஒரு நாள் நீங்கள் தூங்கி பாருங்கள். எப்போதும் இல்லாத நல்ல தூக்கத்தை நீங்கள் அனுபவிக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க. குதிரை நல்ல தண்ணீரை மட்டுமே குடிக்கும். குதிரை தண்ணீர் அருந்தும் நீர் நிலைகளில் தண்ணீர் குடித்தால் அவ்வளவு அருமையாக இருக்குமாம். அசுத்த தண்ணீரை குதிரைகள் எப்போதும் குடிப்பது இல்லையாம்.

- Advertisement -

முயல்கள் தோண்டி வைத்திருக்கும் குழிகளில், மரத்தை நட்டு வளர்த்தால் அந்த மரம் செழிப்பாக வளரும். நாம் சாப்பிடும் காளான் மீது பூச்சிகள் இருந்தால் மிகவும் நல்லது தான். விஷ காளான்கள் மீது ஒருபோதும் பூச்சிகள் அமர்வதில்லையாம். அதுபோல் நாம் சாப்பிடும் பழங்களில் புழுக்கள் இருந்தால் அதனை தூக்கி போட தேவையில்லை. நஞ்சுள்ள கனிகளில் புழுக்கள் வராது. அதனால் புழுக்கள் இருக்கும் பகுதியை நீக்கிவிட்டு அந்த கனியை சாப்பிடலாம்.

fruits

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வெற்றி அடைய பறவைகளை உற்று நோக்குங்கள். அது எப்பொழுது தூங்க செல்கிறதோ! அப்பொழுது நீங்களும் தூங்க செல்ல வேண்டும். அது எப்பொழுது எழுந்துக் கொள்கிறதோ! அப்பொழுது நீங்களும் எழுந்திருக்க வேண்டும். இப்படி செய்தால் வானம் கூட உங்கள் வசப்படும். செயற்கையை தவிர்த்து இயற்கையான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இயற்கையாகவே தைரியம் நிறைந்த இதயமும், வலிமையான கால்களும் கிடைத்து விடுமாம்.

bird-in-hand

எதற்கெடுத்தாலும் வளவளன்னு பேசிக்கிட்டே இருக்காதீங்க. கொஞ்சமா பேசுங்க. தேவையானதை மட்டும் காதால் கேளுங்கள். மற்ற நேரங்களில் அமைதியாக இருங்கள். நீங்கள் அமைதியாக இருக்கும் போது உங்களுடைய ஆன்மாவும் அமைதியாக இருக்கும். ஆன்மா அமைதியாக இருந்தால் தான் நீங்கள் எடுக்கும் முடிவுகளும் சரியாக இருக்கும். இல்லை என்றால் ஒவ்வொரு முடிவும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படியெல்லாம் வாழ்ந்தால் வாழ்க்கை இனிமை தானே?

இதையும் படிக்கலாமே
நான்ஸ்டிக் தவா மற்றும் கடாய் இப்படி மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள் வீணாக போய்விடும்! எண்ணெய் பிசுக்கு போக என்ன தான் செய்யலாம்?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.