கை வலிக்காமல் வாஷிங்மெஷினிலேயே துணி துவைக்க இப்படி ஒரு ஐடியா இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போய்விட்டதே. தினம் தினம் இடுப்பு வலிக்க துணி துவைப்பவர்களுக்கு இனி விடுதலை.

washing-mechin
- Advertisement -

வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தால் கூட சிரமப்படாமல் துணியை நிச்சயமாக துவைக்க முடியாது. காலரில் அழுக்கு போக, ரொம்பவும் அழுக்கு படிந்த துணியில் இருக்கும் அழுக்கை நீக்க, தனியாக அதை ஊறவைத்து துவைக்க வேண்டிய கஷ்டம் எல்லா பெண்களுக்கும் இருக்கும். சுலபமாக துணி துவைக்க ஒரு சில ஐடியாக்கள் உள்ளது. அதில் ஒரு சிலவற்றைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்புகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாகவே வாஷிங் மிஷினில் போட்டு துணி துவைத்தால் காலரில் இருக்கக்கூடிய அழுக்குகள் அவ்வளவு எளிதில் போகாது. வாஷிங்மெஷினில் துணியைப் போட்டுவிட்டு அதில் லிக்விட் அல்லது பவுடரையும் போட்டுவிட்டு கூடவே இந்த 1 பொருளையும் போட வேண்டும். அலுமினியம் ஃபாயில் பேப்பர். இது தனியாகவும் கடைகளில் விற்கிறது. காசு கொடுத்து வாங்குபவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஹோட்டலில் சப்பாத்தி, தோசை போன்ற பொருட்களை இதில் வைத்து சுருட்டி கொடுப்பார்கள். ஹோட்டலில் வெரைட்டி ரைஸ் கூட பேக் பண்ணி கொடுப்பாங்க. அதை கழுவி சுத்தம் செய்துவிட்டு கூட குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த அலுமினியும் ஃபாயில் பேப்பரை சிறிய சிறிய துண்டுகளாக கிழித்து கசக்கி சின்ன சின்ன பேப்பர் பால் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாஷிங் மெஷினில் துணிகளோடு சேர்த்து இந்த அலுமினியம் பாயில் பேப்பர் பால்களையும் தேவைக்கு ஏற்ப 3 அல்லது 4 போட்டு விடுங்கள். துணியில் இருக்கும் அழுக்கை போக்குவதற்கு இந்த பேப்பர் உதவியாக இருக்கும். வாஷிங் மெஷின் சுற்றி சுற்றி துவைக்கும் அல்லவா. அப்போது இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பர் உங்கள் துணியில் இருக்கக்கூடிய அழுக்கை சீக்கிரமாக போக்கிவிடும்.

அப்படி இல்லை என்றால் வாஷிங் மிஷினில் துணியில் இருக்கும் அழுக்குப் போக வேண்டும் என்பதற்காகவே ஆன்லைனில் washing machine balls கிடைக்கிறது. அதை வாங்கி வாஷிங் மிஷினில் போட்டால் கூட துணிகள் அழுக்கு போக துவைத்து நமக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு பெட்ஷீட்டை எல்லாம் வாஷிங்மெஷினில் போட்டு துவைக்கும் போது அதில் இருக்கும் அழுக்கு சுத்தமாக போகாதல்லவா. அப்படிப்பட்ட கடினமான பொருட்களை கூட அழுக்குப் போக துவைக்கும்.

- Advertisement -

துணிகளை அயன் செய்யாமலேயே சுருக்கம் இல்லாமல் மாற்றுவதற்கு எளிய ஒரு குறிப்பையும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில சட்டைகள் எல்லாம் வாங்கிய புதுசில் கஞ்சி போட்டு ஸ்டிப்பாக போட்டுக் கொள்ள அழகாக இருக்கும். காலப்போக்கில் அதில் இருக்கும் கஞ்சி எல்லாம் போய் என்னதான் அயன் செய்தாலும் அதில் புது சட்டையினுடைய பொலிவை மீண்டும் கொண்டு வர முடியாது அல்லவா. அந்த பழைய சட்டையை புதுசு போல மாற்ற இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவை போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, இரண்டு நிமிடம் போல கைவிடாமல் கலக்கி காய்ச்ச வேண்டும். அது லேசாக திக்காக வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு, அதில் 2 லிட்டர் அளவு தண்ணீரை சேர்க்க வேண்டும். இப்போது இந்த தண்ணீர் இரண்டு சட்டை நனைக்கும் அளவுக்கு சரியாக இருக்கும். துவைத்த இரண்டு சட்டையை இந்த தண்ணீரில் நனைத்து ஐந்து நிமிடம் கழித்து அப்படியே லேசாக கசக்காமல் பிழிந்து ஒரு ஹேங்கரில் மாட்டி வெயிலில் காய வைத்து விட்டால் சட்டை புதுசாக வாங்கிய சட்டை போலவே கஞ்சி போட்டது போலவே சுருங்காமல் சூப்பராக ஸ்டிபாக கிடைத்துவிடும். சின்ன சின்ன இந்த இரண்டு குறிப்பு பிடிச்சிருந்தா. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -