- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுர் சக்திகள் வீட்டை விட்டு வெளியேற பரிகாரம்

துர் சக்திகள் வீட்டை விட்டு வெளியேற பரிகாரம்

- Advertisement -

துர்க்கா தேவியை மனதார வழிபாடு செய்தால் துர்சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. துர்கா தேவியை மனதில் நினைத்து செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை வீட்டில் செய்தால் போதும். வீட்டில் தங்கி இருக்கும் கண் திருஷ்டி கெட்ட சக்தி அனைத்தும் வெளியேறிவிடும். உங்கள் உடம்பை பிடித்த கண்திருஷ்டி கெட்ட சக்தியும் வெளியேறும். எதிர்மறை ஆற்றலால் நம்மை நெருங்காமல் பிரச்சனைகளை விரட்டி அடிக்க இந்த பரிகாரம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

துர் சக்திகள் விலக பரிகாரம்

செவ்வாய்க்கிழமை ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் இந்த பரிகாரத்தை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்யுங்கள். தவறு கிடையாது. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு உரிய நாள். ஆகவே அந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்தால் பலன் இரட்டிப்பு மடங்காக கிடைக்கும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிடுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் துர்க்கை அம்மன் திருவுருவப்படம் இருந்தால் சரி, இல்லை என்றாலும் வேறு ஏதாவது அம்மனின் திரு உருவப்படம் இருக்கும் அல்லவா. அந்த அம்மனுக்கு சிவப்பு நிற பூக்களை வாங்கி போட்டு விடுங்கள். ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் கொஞ்சம் சீரகம் போட்டு அம்பாளின் முன்பு வைத்து விடுங்கள்.

அம்பாள் முன்பு ஒரு சொம்பில் சீரகத் தண்ணீர் இப்போது இருக்கிறது. ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றுங்கள். அந்த கல்லுப்பை துர்க்கை அம்மன் படத்திற்கு முன்பாக சொம்பில் இருக்கும் சீரகத் தண்ணீரில் போட்டு விட வேண்டும். அடுத்து உங்களுடைய பிள்ளைகளுக்கு பிரச்சனை கணவருக்கு பிரச்சனை இப்படியே ஏதாவது இருந்தால், அவர்களுக்காக தனியாக ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து அவர்களுடைய தலையையும் சுற்ற வேண்டும்.

- Advertisement -

எத்தனை நபர் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அத்தனை நபருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கைப்பிடி கல்லுப்பை எடுத்து சுற்றி, துர்க்கை அம்மன் திருவுருவப்படத்திற்கு முன்பு இருக்கும் சொம்பு தண்ணீரில் அந்த கல்லுப்பை போட்டு விட வேண்டும். பிறகு உங்களுடைய கோரிக்கையை துர்க்கை அம்பாளிடம் சொல்லுங்கள் “ஓம் தும் துர்காயை நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு உங்களை பிடித்த பீடை தரித்திரம் கஷ்டம் எதிர்மறையாற்றல் அனைத்தும் விலக வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு 1/2 மணி நேரம் கழித்து இந்த சொம்பு தண்ணீரை கொண்டு போய் வீட்டிற்கு வெளிப் பக்கமாக, கொஞ்சம் தூரம் தள்ளி ஊற்றி விட வேண்டும். அடுத்தவர்களுடைய வாசல் இல்லாமல், அடுத்தவர்களுடைய வீட்டிற்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் இடத்தில் இந்த தண்ணீரை கொட்டி விட்டு வந்தால் உங்களை பிடித்த அத்தனை துர்சக்திகளும் உடம்பிலிருந்து வெளியேறும்.

இதையும் படிக்கலாமே: சுக்ர தோஷத்தை நீக்கும் தானம்

வீட்டில் இருக்கும் துர் சக்திகளும் வெளியேறிவிடும் கண்திருஷ்டியால் பெரிய அளவில் வீட்டில் பாதிப்புகள் ஏற்படாது என்பதும் நம்பிக்கை. இந்த எளிய பரிகாரத்திற்கு பெரிய சக்தி இருக்கிறது துர்க்கை அம்பாளே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து விடுவாள். நெகட்டிவ் எனர்ஜியை துரத்தி அடித்து விடுவாள் நம்பிக்கை இருந்தால் வருடத்திற்கு மூன்று முறை இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பாருங்கள் குடும்பப் பிரச்சனை குறைவதை நீங்களே கண்கூடாக உணரலாம்.

சற்று முன்