வீட்டில் இருக்கும் துர் சக்திகளை விரட்டியடிக்க இந்த ஒரு விளக்கு போதும்.

amman1
- Advertisement -

உங்களுடைய வீட்டிலும் சரி தொழில் செய்யக்கூடிய இடத்திலும் சரி, அடுத்தடுத்து தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இந்த விளக்கை தெற்கு திசையில் ஏற்றி வரும் போது நிச்சயமாக உங்கள் வீட்டிலோ, தொழில் செய்யும் இடத்திலோ இருக்கும் கெட்ட சக்திகளும் கெட்ட தேவதைகளும் உடனடியாக விரட்டி அடிக்கப்படும். அந்த விளக்கை வீட்டில் எப்படி ஏற்றுவது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

துர்சத்தியை விரட்டி அடிக்கும் விளக்கு

இந்த விளக்கை நீங்கள் வீட்டில் ஏற்றினாலும் சரி, தொழில் செய்யும் இடத்தில் ஏற்றினாலும் சரி அந்த இடத்தை மொத்தமாக ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அந்த இடத்தின் மூளை முடுக்குகளில் நன்றாக மஞ்சள் தண்ணீர் தெளித்து விடுங்கள். பூஜையறையில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கு குத்துவிளக்கு ஏதோ ஒன்று ஏற்றி வைத்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்ய குலதெய்வத்தை முதலில் வணங்குங்கள்.

வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு, புகை இருக்க வேண்டும். வீடு தெய்வீக கடாட்சத்துடன் இருக்க வேண்டும். அப்போது உங்களுடைய வீட்டின் தெற்கு திசையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வரவேற்பு அறையில் தெற்கு திசையில் கூட இந்த விளக்கை ஏற்றலாம். ஆனால் பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்ற கூடாது.

- Advertisement -

பொதுவாக எல்லோர் வீட்டிலும் பூஜை அறை கிழக்கு திசையில் தான் இருக்கும் அதனால் பிரச்சனை இல்லை. தெற்கு திசையில், தெற்கு திசையை பார்த்தவாறு மண் அகல் விளக்கை வைத்து, வேப்ப எண்ணெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் திரி போட்டு அந்த வேப்ப எண்ணெயில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அவ்வளவுதான்.

இந்த விளக்கு எவ்வளவு நேரம் எரியுதோ எரியட்டும். அதை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. மூன்று நாள் தொடர்ந்து இந்த விளக்கை ஒரு இடத்தில் ஏற்றினால், அந்த இடத்தில் இருக்கும் துர் தேவதைகள் விரட்டி அடிக்கப்படும் என்பது நம்பிக்கை. மாலை நேரத்தில் விளக்கு வைத்த பிறகு இந்த விளக்கை ஏற்றலாம்.

- Advertisement -

இதை நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் ஏற்றலாம். உங்களுடைய வீட்டிலும் ஏற்றலாம். வேப்ப எண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றலாமா என்ற சந்தேகம் இருக்கும். இந்த பரிகாரத்திற்கு மட்டும் மூன்று நாள் வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றலாம். பூஜை அறை தவிர மற்ற இடங்களில் இந்த வேப்ப எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது.

பரிகாரத்திற்காக ஏற்றக்கூடிய விளக்கு இது. மூன்று நாட்கள் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அந்த மண் அகல் விளக்கை நீங்கள் வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம். அதை எடுத்து தூரமாக கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மூன்று நாட்கள் இந்த விளக்கை ஏற்றி முடித்த பின்பு நிச்சயமாக உங்களுடைய வீட்டில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதை உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: ஹனுமனை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

மூன்று நாளுமே வீட்டை துடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதல் நாள் வீட்டை துடைத்து விட்டால் போதும். மற்ற மூன்று நாட்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றிவிட்டு குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தோடு இந்த வேப்பெண்ணை விளக்கு ஏற்றுங்கள். ஆன்மீகம் சார்ந்த எளிமையான இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -