வாழ்வில் உள்ள துயரங்களை போக்கும் அபிராமி பட்டர் பாடல்

durgai-amman-manthiram-1

மனித வாழ்க்கையே ஒரு விசித்திரமானது. மகிழ்ச்சி, கோபம், வருத்தம் என பலவகையான அனுபவங்களை இந்த மானிட வாழ்வில் நாம் பெறுகிறோம். அப்படி நம் மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளும், அதனால் ஏற்படும் துயரங்களும் ஒரு அனுபவம் தான். இவ்வுலகவாழ்வில் பிரச்சனைகளை சந்திக்காத மனிதர்கள் அநேகமாக யாருமில்லை சிலருக்கு இப்பிரச்சினைகள் சுலபத்தில் தீர்ந்து விடும், ஒரு சிலருக்கோ நீண்ட நாள் நீடித்து துயரங்களைக் கொடுக்கும் இப்படிப்பட்டவர்களுக்கான துயர்தீர்க்கும் அந்தாதிப் பாடல் தான் இது.

Mariamman

பாடல் :
“பொருளே பொருள்முடிக் கும்போகமே
அரும் போகம் செய்யும்மருளே மருளில் வருந்தெருளே
என் மனத் துவஞ்சத் திருளேதும் இன்றி
ஒளிவெளியாகி இருக்கும் உன்றன் அருளேது
அறிகின்றி லேன் அம்புயாதனத்து அம்பிகையே”.

இதையும் படிக்கலாமே:
குழந்தை பாக்கியம் பெற உதவும் எளிய பரிகார மந்திரம்

அகிலத்தை காக்கும் “அன்னை அபிராமியின்” மீதுள்ள தீவிர பக்தியால் அபிராமி பட்டரால் இயற்றப்பட்ட இப்பாடலை இத்தனை முறை தான் என்றில்லாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாய்விட்டோ, அல்லது மனதிற்குள்ளாக ஜெபிக்கும் போது உங்கள் வாழ்வில் ஏற்பட்ட எப்படிப்பட்ட பிரச்சனைகளும் அதனால் ஏற்பட்ட துயரங்களும் நீங்குவதைக் காணலாம். அபிராமியின் பாதம் பணிவோருக்கு அனைத்தும் நன்மையே.

இதையும் படிக்கலாமே:
சுக்கிர யோகத்தை அள்ளித் தரும் சுக்கிரன் மூல மந்திரம்

இதோ போன்ற மேலும் பல தெய்வீக பாடல்கள், தமிழ் மந்திரம், ஆன்மீக கதைகள் போன்ற பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.