- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இனி ஆப்பத்துக்கு மாவு அரைச்சு கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை. வெறும் 10 நிமிடத்தில் இதோ...

இனி ஆப்பத்துக்கு மாவு அரைச்சு கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை. வெறும் 10 நிமிடத்தில் இதோ இப்படி கூட ஆப்ப மாவு தயார் செய்யலாமே.

- Advertisement -

ஆப்பம் செய்ய வேண்டும் என்றாலே அரிசி உளுந்து ஊற வைத்து அவல் ஊற வைத்து மாவு அரைத்து பிறகு அதை புளிக்க வைத்து, அப்பப்பா, ஆப்பம் சாப்பிடக்கூடிய ஆசையே நமக்கு விட்டுப் போய்விடும். நிறைய பேருக்கு ஆப்பம் தேங்காய் பால், ஆப்பம் ஆட்டுக்கால் பாயா, என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் ஆப்பம் செய்வதில் சிரமம் இருக்குதே என்ன செய்வது. இனிமே ஆப்பம் சுட சிரமப்பட வேண்டாம். வெறும் 10 நிமிடத்தில் ஆப்ப மாவை இப்படி அரைத்து பாருங்கள். சூப்பராக சுலபமாக ஆப்பம் செய்ய முடியும். உடனடி ஆப்ப மாவு அரைப்பது எப்படி ரெசிபி இதோ உங்களுக்காக.

உடனடி ஆப்ப மாவு அரைப்பது எப்படி?
இந்த ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள். ரவை 1 கப், லேசான அவல் 1/2 கப், தேங்காய் துருவல் – 1/2 கப், தயிர் – 1/2 கப், தேவையான அளவு – உப்பு, ஆப்ப சோடா – 2 சிட்டிகை.

- Advertisement -

ஒரு அகலமான பவுலில் முதலில் ரவை 1 கப் போட்டு, தண்ணீர் 1 கப் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு ஊற வையுங்கள். 5 நிமிடம் ரவை ஊறட்டும். வேறொரு பவுலில் 1/2 கப் அவல் போட்டு ஒரு முறை தண்ணீரை ஊற்றி நன்றாக தண்ணீர் அலசி, தண்ணீரை கீழே வடித்து விடுங்கள். பிறகு இதில் 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி அவலையும் ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ரவை அவல், இரண்டுமே தண்ணீரில் சாப்ட் ஆக ஊறி வந்தால் தான், மிக்ஸி ஜாரில் மைய அரைபடும். இரண்டு பொருட்களும் ஊறிய பின்பு தண்ணீர் முழுவதும் இழுத்துக் கொண்டிருக்கும். இந்த இரண்டு பொருட்களையும் முதலில் மிக்ஸி ஜாரில் போடுங்கள்.

- Advertisement -

பிறகு 1/2 கப் அளவு தேங்காய் துருவல், 1/2 கப் அளவு தயிர், ஊற்றி இதை மாவாக நைசாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவு ரொம்பவும் திக்காக இருக்கக்கூடாது. தேவையான அளவு தண்ணீரை மிக்ஸி ஜாரில் ஊற்றி அலம்பி மாவோடு கலந்து கொள்ளலாம்.

அவ்வளவு தான். நமக்கு தேவையான ஆப்ப மாவு தயார். இதில் குறைந்த அளவு உப்பு, சோடா உப்பு 2 சிட்டிகை சேர்த்து கலந்து எப்போதும் போல ஆப்பம் வார்க்க வேண்டியதுதான். ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து தயார் செய்து வைத்திருக்கும் மாவை அதில் ஊற்றி, ஆப்பத்தை வட்ட வடிவில் சுற்றி வழக்கம் போல மேலே ஒரு மூடி போட்டு வேகவைத்து எடுத்தால், கூடை கூடையாக ஆப்பம் சூப்பராக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: அசத்தலான வெண்டைக்காய் புளிக்குழம்பு ஹோட்டல் ஸ்டைலில் எப்படி சுவையாக செய்வது? இது தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

உங்களுக்கு இஷ்டமான சைடிஷ் வைத்து ருசித்துப் பாருங்கள். இது இன்ஸ்டன்ட் மாவில் செய்த ஆப்பம் என்று நிச்சயமாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ரெசிப்பி பிடிச்சிருந்தா நாளைக்கு உங்க வீட்ல ஆப்பம் தேங்காய் பால் குருமா தான். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்