இன்று இரவு சாப்பிட என்ன செய்யவதென குழப்பமாக இருக்கிறதா? அப்போ உடனே இந்த ஈஸியான ஆலு பரோட்டாவை செய்து பாருங்கள். இதற்கு மாவு பிசைய வேண்டாம், ரோல் செய்ய வேண்டாம்

aalu-barota
- Advertisement -

பரோட்டா என்றாலே அதை பலரும் கடைகளில் சென்று தன் வாங்கி சுவைக்கிறார்கள். ஏனெனில் அதை மாவு பிசைந்து, ஊற வைத்து, பின்னர் அதனை ரோலாக சுற்றி வைத்து, அதன் பின்னர் சப்பாத்தி போல் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு சில நேரங்களில் பரோட்டா சாஃப்ட்டாக வரவேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் பரோட்டா நாம் நினைத்த அளவிற்கு சுவையாகவும், சாஃப்டாகவும் வந்திருக்காது. இவ்வாறு இவ்வளவு வேலைகள் செய்து சுவை மற்றும் பக்குவம் சரியாக இல்லை என்றால் செய்த வேலைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே இவ்வாறு கஷ்டப்பட்டு செய்யும் பரோட்டாவை விட இப்படி சுலபமான ஒரு பரோட்டாவை செய்து பாருங்கள். இதனை சாப்பிட சாஃப்டாகவும், ருசியாகவும் இருக்கும் வாருங்கள் இந்த ஆலு பரோட்டாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3, வெங்காயம் – 1, மைதா மாவு – ஒரு கப், கரம் மசாலா – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, உப்பு – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் மூன்று உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் மீதுள்ள தோலை நீக்கி, அதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையையும் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

பிறகு இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு கிண்ணத்தில் ஒரு கப் மைதா மாவை சேர்த்து, அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கலந்து வைத்துள்ள மசாலாவையும் இதனுடன் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை கொஞ்சம் கெட்டியாக இருந்தது என்றால் அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளலாம். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைப் போல் ஊற்ற வேண்டும். பின்னர் அதனை ஒரு தட்டு போட்டு மூடி 5 நிமிடம் வேக விட வேண்டும். பின்னர் இதனை திருப்பிப் போட்டு எடுத்தால் சுவையான ஆலு பரோட்டா தயாராகிவிடும்.

- Advertisement -