பளபளப்பான ஸ்கின் ஒரே நாளில் கிடைக்க தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து இப்படி பண்ணினா போதுமே!

coconut-oil-skin
- Advertisement -

பளபளப்பான ஸ்கின் ஒரே நாளில் அவ்வளவு எளிதாக பெற்று விட முடியாது. ஆனால் தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து நாம் முகத்திற்கு தேய்க்கும் பொழுது முகம் உடனடியான பொலிவை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது. அவை என்னென்ன பொருட்கள்? எப்படி இதை பயன்படுத்த வேண்டும்? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எந்த வகையான சருமத்தினரையும் ரொம்பவே இளமையான தோற்றத்தை இன்ஸ்டண்ட்டாக கொடுக்கக்கூடிய இந்த ஒரு ஃபேஸ் பேக் குறைந்த நேரத்திலேயே நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை ஊக்குவிக்கிறது. இதனால் முகம் புத்துணர்வு பெறுகிறது. மேலும் முக துவாரங்கள் இடையே சென்று அதில் இருக்கும் அழுக்குகளை, கிருமிகளை நீக்கி ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு முதலில் நமக்கு மூன்று பொருட்கள் தேவை.

- Advertisement -

முதலாவதாக ஐந்து சொட்டுகள் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆரஞ்சு ஜூஸ் சேர்க்க வேண்டும். ஆரஞ்சு பழத்தின் உடைய சாறை பிழிந்து எடுத்து விதைகள் இல்லாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பயத்த மாவை பயன்படுத்த வேண்டும். பின்னர் இதை ஒரு பேஸ்ட் போல நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.

பொதுவாக சிட்ரஸ் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை நேரடியாக முகத்திற்கு சாறு எடுத்து பயன்படுத்தக் கூடாது. இது ஒரு விதமான எரிச்சலையும், அரிப்பையும் உண்டாக்கும். இதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது நல்ல ஒரு எஃபக்டிவ் ஆனா ரிசல்ட் கிடைக்கும். முகம் வெள்ளை வெளேர் என உடனடியாக ஜொலிக்க துவங்கும். கறுத்த தேகம் உடையவர்கள் சிட்ரஸ் நிறைந்த இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு பேக்களை பயன்படுத்தலாம்.

- Advertisement -

திடீரென வெளியே கிளம்புகிறீர்கள் அல்லது ஏதாவது ஒரு பங்க்ஷன் போக வேண்டும் என்றால், நீங்கள் சட்டுன்னு இந்த பேக்கை தயார் செய்து முகம் முழுவதும் கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளிலும் தடவி ஊற வைத்து விடலாம். 20 நிமிடத்தில் நன்கு ஊறி உலர்ந்துவிடும். ஃபேன் காற்றில் நின்றால் சீக்கிரம் உலரும். அதன் பிறகு நீங்கள் ஈரத் துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
இதுவரைக்கும் இந்த ப்ளிச்சிங் ட்ரை பண்ணாதவங்க, கொஞ்சம் வித்தியாசமா இந்த பேஸ்டை வைச்சி ப்ளிச்சிங் பண்ணி பாருங்க, அப்புறம் உங்க முகம் தக தகன்னு பாலிஷ் பண்ண மாதிரி மின்னும்

இது போல தொடர்ந்து வாரம் இரண்டு முறை நீங்கள் செய்து பாருங்கள், நம்முடைய முகமா இது? என்று ஆச்சரியப்பட்டு போவீர்கள். முதல் மாதம் இரண்டு முறை என துவங்கி படிப்படியாக இதை குறைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான சருமத்தினருக்கும் இது பொருத்தமான ஒரு பேக்காக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது, மேலும் இயற்கையாக நம் வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான் என்பதால் இதை தாராளமாக பயமின்றி பயன்படுத்தலாம். மேலும் இதை முகத்தில் ஒரு முறை நீங்கள் தடவினாலே அவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்வதை காண முடியும், எனவே உங்களுக்கே இது பிடித்து போய் நீங்கள் மீண்டும் மீண்டும் இதை செய்ய ஆரம்பிப்பீர்கள். ஆரோக்கியமான முறையில் இயற்கையாக ஜொலிக்க இதைவிட பெஸ்ட் பேக் இருக்க முடியாது, ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -