இதுவரைக்கும் இந்த ப்ளிச்சிங் ட்ரை பண்ணாதவங்க, கொஞ்சம் வித்தியாசமா இந்த பேஸ்டை வைச்சி ப்ளிச்சிங் பண்ணி பாருங்க, அப்புறம் உங்க முகம் தக தகன்னு பாலிஷ் பண்ண மாதிரி மின்னும்

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் முகத்தை ப்ளீச்சிங் செய்வது மிகவும் அவசியமான ஒன்று தான். இப்போது இருக்கும் பருவ நிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் இவற்றால் சருமம் அதிக பாதிப்புக்கு ஆளாகிறது. அதை சரி செய்ய இது போல ப்ளீச்சிங் முறைகளை கையாளுவது சிறந்தது தான். அதையும் முடிந்த அளவு கெமிக்கல் இல்லாமல் இயற்கையான முறையில் செய்து கொண்டால், சருமம் எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக் கூடிய ப்ளீச்சிங் குறித்து தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ப்ளிச்சிங், பேசியல் என எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு முன் முகத்தை கிளென்சிங் (சுத்தப்படுத்த) செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பிசுக்குகள், இறந்த செல்கள் என அனைத்தும் வெளியேற இந்த கிளென்சிங் முறை உதவியாக இருக்கும்.

- Advertisement -

இப்போது கிளன்சிங் செய்வதற்கு ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை எடுத்து கொள்ளுங்கள் அதில் காட்டனை நனைத்து, உங்கள் முகத்தில் லேசாக ஒற்றி எடுங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமம் மிருதுவாகி எண்ணெய் பசை நீங்கி இறந்த செல்கள் வெளியேறி விடும். பத்து நிமிடம் கழித்து காட்டன் துணியை வைத்து முகத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள்.

அடுத்து ப்ளீச்சிங் செய்வதற்கான பொருட்களை தயார் செய்து கொள்வோம். அதற்கு ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளியை நன்றாக ஊற வைத்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள். இத்துடன் அரை டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு டீஸ்பூன் தேன் இவை அனைத்தையும் நன்றாக, கலந்து முகத்தில் ஒரு பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். இதை போடும் போது புருவ முடி, தலை முடியில் படாமல் போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேக் போட்டு 20 நிமிடம் வரை உங்கள் முகத்தை அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தமாக கழுவி விடுங்கள். உங்கள் முகம் பளிச்சென்று மாறி விடும். இந்த ப்ளீச்சிங் செய்வதை இரவில் தூங்க செல்லும் முன் செய்தால் இதை செய்த பிறகு நன்றாக தூங்கி எழும்போது உங்கள் முகம் மேலும் அழகாகும்.

இதில் கலந்திருக்கும் புளி சாறு முகத்தின் உள்ளே சென்று உள்ளிருக்கும் இறந்த செல்கள் முழுவதையும் வெளியேற்ற உதவி செய்யும். தயிரும் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி முகம் வெண்மையாக்க உதவி செய்யும். அதே போல் எலுமிச்சை சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள சன் டைன்களை சுத்தம் செய்து,சருமத்தை ஒரே நிறத்தில் வைத்து இருக்கும். தேன் நம்முடைய ஸ்கின்னை எப்போதும் இளமை தோற்றத்துடன் வைத்திருக்கும். கஸ்தூரி மஞ்சள் நல்ல நிறத்தை கொடுக்கும். இவை அனைத்தையும் சேர்த்து செய்யும் இந்த ப்ளீச்சிங் சருமம் நீண்ட நாட்கள் பளபளப்பாகவும், சுருக்கமில்லாமல் இருக்கவும், வெயிலினால் ஏற்பட்ட கருத்திட்டுகள் மறைந்து முகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெண்மையாக இருக்க உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: உங்க முகம் தங்க போல ஜொலிக்க நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த ஒரு பொருள் போதும். பார்லர் செல்லாமலே முகம் மின்னும். மணப் பெண்களுக்கான பேசியல் பேக்.

நீங்களும் இனி ப்ளிச்சிங் செய்வதாக இருந்தால் இந்த முறையில் செய்து பாருங்கள். இது எல்லா சருமத்தினருக்கும் ஏற்ற கெமிக்கல் இல்லாத ஒரு ப்ளிச்சிங் டிப்ஸ்.

- Advertisement -