அடிக்கிற வெயிலுக்கு உங்க வீட்ல இருக்க செடி வாடி போகின்றதா? அதிகப்படியான ஊட்டச்சத்து பெற்று, செழிப்பாக வளர இந்த தண்ணீர் ஊற்றினாலே போதும்.

Rose
- Advertisement -

வெயில் காலம் வந்து விட்டது என்று சொன்னாலே, செடிகள் சற்று வாடிய நிலையில் தான் காணப்படும். அதற்கான ஊட்டச்சத்து என்பது முழுமையாக வெயில் காலங்களில் கிடைக்காது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் அந்த செடிகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை. உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடிகளாக இருந்தால், அதை தொட்டியில் வைத்து வளர்த்து வந்தால், நேரடியாக சூரிய வெளிச்சத்தில் படாமல், நிழலாக இருக்கும் இடத்தில் மாற்றி வைப்பது மிகவும் நல்லது.

watering-rose-plant

தோட்டத்தில் நேரடியாக மண்ணில் வைத்து வளர்ப்பவர்கள், எதுவும் செய்ய முடியாது. முடிந்தவரை பெரிய மரங்களின் நிழலுக்கு அடியில் இப்படிப்பட்ட செடிகளை வைத்து பராமரிப்பது மிகவும் நல்லது. உங்களது வீட்டில் இருக்கும் எந்த செய்தியாக இருந்தாலும், அதற்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை, வெயில் காலங்களிலும் நம்மால் கொடுக்க முடியும். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு பெரியதாக எதுவும் செலவு செய்ய தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பீட்ரூட் மட்டுமே போதும். அது சற்று காய்ந்த பீட்ரூட்டாக இருந்தாலும், அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பீட்ரூட்டை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இந்த பீட்ரூட் துண்டுகளை போட்டு அதன்மேல் ஒரு மூடியை போட்டு ஒரு ஓரமாக எடுத்து வைத்துவிடுங்கள்.

Beetroot

நான்கிலிருந்து ஐந்து நாட்கள் அந்த பீட்ரூடானது, தண்ணீரிலேயே நன்றாக ஊற வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து பீட்ரூட்டில் இருந்து, அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து, உங்களது செடிக்கு ஊற்றி வந்தாலே போதும். உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடி, மல்லி செடி, செம்பருத்தி செடி, சாமந்திப் பூ செடி, இப்படி எல்லா செடிகளுக்கும் இந்த தண்ணீரை ஊற்றலாம். இதை தவிர்த்து உங்கள் வீட்டில் வைத்திருக்கும் மற்ற செடிகள் எதுவாக இருந்தாலும் இந்த தண்ணீரை ஊற்றுவது தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

Rose

இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை 15 நாட்களுக்கு ஒருமுறை, 2 கப் அளவு உங்கள் செடிகளுக்கு ஊற்றினாலே போதும். செடி செழிப்பாக வளர்வதைப் நம்மால் பார்க்க முடியும். இதோடு மட்டுமல்லாமல், அதிகப்படியான மொட்டுக்கள் வைத்து அந்த மொட்டுக்கள், எந்த ஒரு சேதாரமும் இல்லாமல், பெரியதாக பூப்பூக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டு செடிகளுக்கு செலவில்லாமல் இந்த ஊட்டச்சத்து தண்ணீரை தயாரித்து, ஊற்றி பாருங்கள்.

rose

இந்த தண்ணீரை ஊற்றுவதற்கு முன்பாக, உங்களது தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு அதன் பின்பு இந்த ஊட்டச்சத்து தண்ணீரை ஊற்ற வேண்டும். முதலில் இந்த ஊட்டச்சத்து தண்ணீரை ஊற்றி விட்டு, இரண்டு மணி நேரம் கழித்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது நல்லது.

- Advertisement -