உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சினை மாறி மாறி வருகிறதா? அப்படின்னா இத மட்டும் செஞ்சு பாருங்க போதும்!

pournami-salt

ஒருவருடைய வீட்டில் எப்பொழுதாவது பிரச்சனைகள் வரலாம். ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தால்! அதற்கு அந்த வீட்டில் இருக்கும் நெகட்டிவ் ஆற்றல்கள் காரணமாக இருக்கும். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை கூட திடீரென இப்படி ஆகலாம். ஒரு விஷயத்தை நாம் செய்ய நினைத்தால் நிச்சயமாக அந்த விஷயம் கடைசியில் தோல்வியைத் தான் தழுவும். இப்படி ஒவ்வொரு முறையும் நடக்கும் பொழுது நமக்கே நம் வீட்டில் ஏதாவது செய்வினை இருக்குமா? என்று பயமே வந்து விடுவது உண்டு. இந்த பயத்தை நீக்குவதற்கு நாம் சுலபமாக என்ன செய்யலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

sad-crying2

பில்லி, சூனியம், ஏவல் போன்ற விஷயங்களை உண்மையா? பொய்யா? என்பது இப்போது இங்கு முக்கியமே இல்லை. நம்முடைய வீட்டில் தொடர்ந்து கெட்ட விஷயங்கள் நடக்கும் பொழுது நம் மனம் நேர்மறை சிந்தனைகளை வெளிவிடுவது இயற்கையாக நடக்கிறது. அந்த சமயத்தில் எவ்வளவு முயற்சித்தாலும், நல்ல விஷயங்களை நினைக்கவே முடியாது. ஒரு முறை, இரு முறை நடக்கும் பொழுது நமக்கு அது பெரிதாக தெரிவதில்லை. ஆனால் தொடர்ந்து ஒரே விஷயம் நடக்கும் பொழுது நம் மனம் நிச்சயம் திசை மாறி பயணிக்கும். இது இயல்பான ஒரு விஷயம் தான்.

ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால், அந்த இடத்திற்கு செல்ல முடியாமல் ஏதாவது ஒரு தடை வந்து விடுவது உண்டு. நாலு நாள் வேலைக்கு சென்றால், அடுத்த நாலு நாட்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பணவரவு தடைபடுகிறது. இதுவரை பட்ட கடன்கள் எல்லாம் தீர்ந்து மீண்டும் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் பொழுது, ஏதாவது ஒரு ரூபத்தில் திரும்பவும் கடன் வாங்க நேரிடும். அல்லது ஏற்கனவே இருந்த செலவுகளை எல்லாம் சமாளித்து, அடுத்த அடி எடுத்து வைக்கும் பொழுது, பெரிய செலவாக வந்து நிற்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களிலும் திடீரென வீண் விரயங்கள் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம்.

medicine

இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடக்கும் பொழுது நமக்குள்ளும் நம் வீட்டில் ஏதோ ஒரு விஷயம் தவறாக இருப்பதை உணர முடிகிறது. இது போன்ற சமயத்தில் நாம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அழிப்பதற்கு இந்த பரிகாரத்தை மேற்கொண்டு பார்க்கலாம். மிகவும் சுலபமான இந்த பரிகாரத்தை வீட்டில் செய்து பார்த்தால், அதனால் உண்டாகும் நன்மைகளை நாம் பெற முடியும். அது என்ன பரிகாரம்? இந்த பரிகாரம் செய்ய அமாவாசை அல்லது பௌர்ணமி தினத்தை தேர்ந்தெடுங்கள். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் விசேஷ சக்திகள் பிரபஞ்சத்தில் ஊடுருவி இருக்கும். அதனால் தான் இந்த தினங்களை பரிகாரம் செய்வதற்கு உகந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏதாவது ஒரு அமாவாசை அல்லது பௌர்ணமி தினத்தில் உங்கள் வீட்டின் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு, வடமேற்கு மூலையில் சிறிய கண்ணாடி பவுள் ஒன்றில் முழுவதுமாக கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். கல்லுக்கு எதிர்மறை ஆற்றல்களையும், தீவினைகளையும் நீக்கும் அதீத சக்தி உள்ளது. கல் உப்பில் மகாலட்சுமியும், ஸ்ரீமன் நாராயணன் வாசம் செய்கிறார்கள். இவர்கள் இருக்கும் அந்த இடத்தில் கெட்ட சக்திகள் இருந்தாலும் விலகிவிடும். இந்த 15 நாட்களும் அதற்கு அருகில் யாரையும் செல்ல அனுமதிக்காதீர்கள். இது வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் கிரகிக்கப்படுவதற்கு உதவும்.

kan-thirusti

கல் உப்பை நிரப்பிய பின்பு உப்பின் நான்கு திசைகளிலும் வரமிளகாய்களை காம்பு கீழேயும், அடிப்பகுதி மேலேயும் இருக்குமாறு சொருகி வையுங்கள். இடையில் ஒரு எலுமிச்சை பழத்தை நான்காக வெட்டி அதனுள் கல் உப்பையும் தூவி நடுவில் வையுங்கள். அடுத்த அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களில் நீர் நிலைகளில் கரைத்து விடுங்கள். நீர் நிலைகளை தேடி அலைய முடியாவிட்டால், சிறிய பக்கெட்டில் தண்ணீரை வைத்து அதில் கரைத்து அந்த தண்ணீரை யாருடைய கால்களிலும் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் எந்தவிதமான நெகட்டிவ் எனர்ஜியும் முற்றிலுமாக வீட்டிலிருந்து நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே
மருதாணி இலை நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும்! ஆனால் வியக்கும் அளவிற்கு இவ்வளவு நல்லதுன்னு நமக்கு தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.