மருதாணி இலை நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும்! ஆனால் வியக்கும் அளவிற்கு இவ்வளவு நல்லதுன்னு நமக்கு தெரியாம போச்சே!

maruthani

மருதாணியில் மகாலட்சுமியும், ஸ்ரீமன் நாராயணனும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி வீட்டின் முன் வாசலில் வைத்திருக்கிறார்களோ! அந்த வீட்டில் செல்வம் அதிகமாக பெருக வாய்ப்புகள் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஆன்மீக ரீதியாக மகத்துவம் வாய்ந்த அற்புதமான மருதாணி செடி மிகவும் விசேஷமானது. ஜோதிடத்திலும் மருதாணிக்கு தனி சிறப்பு உண்டு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மருதாணி செடியின் இலையை காரிய வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கூட பயன்படுத்தலாம் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? வாருங்கள் அதைப் பற்றிய அலசலை இப்பதிவு மூலம் தெரிந்து கொள்வோம்.

vishnu-laxmi

ஜோதிட சாஸ்திரத்தில் தோஷங்களைப் போக்க மருதாணி செடியை நட்டு வளர்க்க சொல்வார்கள். மருதாணியில் மகாலட்சுமி மட்டுமல்ல, விஷ்ணு பகவானும் வாசம் செய்கிறார். இதனால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தாராளமாக மருதாணியை இட்டுக் கொள்ளலாம். ஆண்கள் மருதாணி இட்டுக் கொள்வது அவமானத்திற்கு உரியது அல்ல. இயற்கையாகவே கிடைக்கும் மருதாணி, ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு சில ஆண்கள் மட்டும் சிறிதளவு மருதாணியை உள்ளங்கையில் வட்டமாக வைத்துக் கொள்வதை பார்த்திருப்போம். இது மிகவும் நல்ல பழக்கம் ஆகும்.

டிசைன் டிசைனாக வைத்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. சிறிதளவு மருதாணியை நாம் வைத்துக் கொண்டாலே அந்த அளவிற்கு நிறைய பலன்களைப் பெற முடியும். ஒரு விஷயம் உங்களுக்கு நடக்க வேண்டும் என்கிற வேண்டுதல் இருந்தால் சிறிதளவு மருதாணியை பறித்து அரைத்து, பூஜை அறையில் வைத்து பூஜை செய்து பின்னர் அதனை சிறிதளவு கையில் வைத்துக் கொண்டு வணங்கி வரலாம். மருதாணி வைத்த கையால் நாம் எதை செய்தாலும் அவைகள் ஜெயமாகும்.

maruthani 2-compressed

சுப மங்கள காரியங்களை செய்வதற்கு முன்னால் யாருக்கு மங்கள காரியம் நடக்க இருக்கிறதோ, அவர்களுக்கு மருதாணி வைப்பது நலமாகும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி உள்ளங்கையில் சிறிதளவு மருதாணி வைத்துக் கொள்ள நன்மைகள் பிறக்கும். பொதுவாகவே நல்ல விஷயம் நடக்கும் பொழுது, அதாவது திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், வளைகாப்பு செய்து கொள்ள இருக்கும் பெண்கள், பூப்பெய்திய பெண்கள் போன்றவர்களுக்கு நிறைய திருஷ்டிகள் இருக்கும். இவர்களுக்கு தீய சக்திகள் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியில் அனுப்ப மாட்டார்கள்.

- Advertisement -

இத்தகையவர்களுக்கு உள்ளங்கையில் சிறிதளவு மருதாணி வைத்து விட்டால் போதும். எந்த ஒரு துஷ்ட சக்தியும் இவர்களை அணுகாது. மருதாணிக்கு அத்தகைய ஆற்றல்கள் உண்டு. மேலும் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட பெண் அல்லது வரனுக்கு கைகளில் மருதாணி வையுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். அது போல வண்டி, வாகனங்கள் வைத்திருப்பவர்கள் சிறிதளவு மருதாணி இலைகளை வண்டியில் வைத்தால் நடக்கவிருக்கும் விபரீதங்கள் திசை திரும்பி சென்று விடும். மேலும் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

maruthani2

மருதாணியில் இருக்கும் குளிர்ச்சியான தன்மை உஷ்ணத்தை வெகுவாக குறைக்கும். குளிர்ச்சி உடம்பு கொண்டவர்கள் அடிக்கடி மருதாணி வைப்பதை தவிர்ப்பது நல்லது. அதே போல் உஷ்ண உடம்பு கொண்டவர்கள் அடிக்கடி மருதாணி வைப்பது மிகவும் நல்லது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க, மருதாணியை வைத்துக் கொள்ளலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும். மருதாணிக்கு தீட்டு என்பது கிடையாது. எனவே தீட்டு காலங்களில் கூட மருதாணியை தாராளமாக பயன்படுத்தலாம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மருதாணியை பற்றி மேலும் உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கலாம். அனைவருக்கும் பயன்படும்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வீட்டில், உங்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய இந்த பொருட்களை எல்லாம், தானமாகக் கொடுத்தால் நிச்சயம் உங்கள் வீட்டு ஐஸ்வரியம், உங்கள் கையாலேயே வெளியே சென்றுவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.