திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு

Tippu

மைசூரை ஆண்ட மன்னர்களின் பட்டியலில் முக்கிய இடத்தினை பெற்றவர் திப்பு சுல்தான் . ஹைதர் அலியின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவரான இவர் தனது தந்தையுடன் சேர்ந்து போரில் ஆங்கிலேயர்களை தனது இளம் வயதிலேயே வென்றிருக்கிறார் . தனது தந்தை இறந்ததும் மைசூரின் மன்னர் பதவியில் அமர்ந்த இவர் அவரது தந்தையினை போன்றே சிறப்பான ஆட்சியாளர் என்பதனையும் நிரூபித்தார்.

tipu-1

மேலும் ஆங்கிலேயர்களை எதிர்க்க மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தியுள்ளார். ஆங்கிலேயே அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் தான் போர்க்களத்தில் இருக்கும்போதே தனது உயிரை விட்டார். மைசூரை ஆண்ட மன்னர்களில் ஆங்கிலேயர்களை தனது வீரம் கொண்டு அச்சுறுத்திய இந்த மாவீரனின் வாழ்க்கை தொகுப்பினை இந்த பதிவின் மூலம் காண்போம் வாருங்கள்.

திப்பு சுல்தான் பிறப்பு :

திப்பு சுல்தான் கர்நாடக மாநிலத்தில் உள்ள “தேவனஹள்ளி” என்னும் இடத்தில் 1750ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஹைதர் அலி மற்றும் ஃவாதிமா என்ற தமபதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை ஒரு மிகச்சிறந்த போர்வீரர் என்பதனால் திப்பு சுல்தானும் தனது சிறுவயது முதல் போர்கலைகளை பயின்று மிகச்சிறந்த வீரனாக உருவெடுத்தார்.

மைசூரின் புலி” என்று புகழும் அளவிற்கு இவரது வேகம் போரில் இருக்கும். இதனை அவருடைய தனிச்சிறப்பு என்று கூட கூறலாம்.

பெயர் – திப்பு சுல்தான்
பிறந்த தேதி மற்றும் வருடம் – நவம்பர் 20, 1750
பெற்றோர் – ஹைதர் அலி மற்றும் ஃவாதிமா
பிறந்த இடம் – தேவனஹள்ளி [கர்நாடகா]

- Advertisement -

இளம்வயதில் போர்க்கலைகள் மீது ஈடுபாடு :

திப்பு சுல்தான் தனது இளம் வயதிலிருந்து போரில் எவ்வாறு சண்டையிட வேண்டும். போர்கலைகளை முழுவதுமாக கற்றறிந்து அதனை இச்சமயத்தில் வெளிக்கொணர வேண்டும் என்பதனையும் அறிந்து வைத்திருந்தார். மேலும் அவரது வாலிப வயதிலேயே பயம் அறியாமல் போர்க்களம் புகுந்தார்.

இவரது வீரத்தினை கண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கூட அவர்களது அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியது. அதில் குறிப்பிட்டுள்ளவை ” திப்பு சுல்தான் ஒரு மாவீரன் ” அவன் மற்ற இந்திய மன்னர்கள் போல இல்லை. அவனது திறம் மற்றும் போர் வியூகம் மற்ற மன்னர்களிடம் இருந்து தனித்து காணப்படுகிறது. என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

tipu-2

மன்னராக அரியணை ஏறிய திப்பு சுல்தான் :

திப்பு சுல்தான் தனது இளம் வயதிலேயே பல போர்களை கண்டு திறமையான ஒரு வீரனாக வலம்வந்தார். அதற்கடுத்து இவரது 26 ஆம் வயதில் 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு எதிராக போர் புரிந்து காதிகோட்டையினை கைப்பற்றினார் . இந்த வெற்றி அவரது சிறப்பான ஒரு வெற்றியாக கருதப்படுகிறது.

பிறகு 1782 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் மைசூர் போரின்போது அவரின் தந்தை இறக்கநேரிட இவர் மன்னர் அரியணையில் அமர்ந்தார்.

மங்களூர் உடன்படுக்கை :

1780 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கும் மைசூரை ஆண்ட ஹைதர் அலி படையினருக்கும் போர் மூண்டது. இந்த போரில் தனது தந்தையுடன் இணைந்து இவரும் போரில் சண்டையிட்டார். இந்த போர் சுமார் 4 ஆண்டுகள் நடைபெற்றது. இந்த போரின் பாதியில் திப்பு சுல்தானின் தந்தை இறக்கவே இவரே முன்னின்று இந்த போரினை வழிநடத்தினார்.

4 ஆண்டுகள் நீடித்த இந்தப்போரானது 1984ஆம் ஆண்டு “மங்களூர் உடன்படிக்கை” மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

சீரங்கப்பட்டினம் உடன்படிக்கை [அ] மூன்றாம் மைசூர் போர் :

1789ஆம் ஆண்டு திப்பு சுல்தான் படை மூன்றாவது மைசூர் போரினை சந்தித்தது. அந்த சமயத்தில் ஆங்கிலேய படையுடன் கூட்டு சேர்ந்து மராட்டிய மற்றும் ஹைதராபாத்தின் நிஜாம் படையும் ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய படையுடன் திப்பு சுல்தான் படையினை எதிர்த்து போர் புரிந்தனர்.

tipu-3

இந்த போரும் தனது சிறப்பான தலைமையின் மூலம் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை நடைபெற்றது. இறுதியில் திப்பு சுல்தான் படை தோல்வியுற்றது. இந்த தோல்வியின் காரணமாக சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின் படி அவரது ஆட்சிக்குட்பட்ட பல பகுதிகளை அவர் ஆங்கிலேய அரசு, மராட்டிய அரசு மற்றும் நிஜாமின் அரசு குடுக்க வேண்டியதாயிற்று.

நான்காம் மைசூர் போர் :

1799ஆம் ஆண்டு மீண்டும் ஆங்கிலேய மற்றும் மைசூர் படையினருக்கும் இடையே நான்காம் மைசூர் போர் துவங்கியது. இந்த போரினை அவர்கள் துவங்கும் முன்னரே அவர்களால் திப்பு சுல்தானை போர்க்களத்தில் சண்டையிட்டு வாழமுடியாது என்பதனை அறிந்த காரணத்தினால் ஏற்கனவே செய்த முன்கூட்டிய சதிகளுடன் போரினை துவங்கினர்.

அதாவது போர் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்னரே திப்பு சுல்தான் அணியில் இருந்த பலருக்கு பணம் மற்றும் செல்வம் போன்று அனைத்தையும் கொடுத்து அவர்களது படையில் இருந்த முக்கியமான சிலரை தங்களது கைவசப்படுத்திய ஆங்கிலேயர்கள் தைரியமாக திப்பு சுல்தானுக்கு எதிரான போரினை துவங்கினார்கள்.

போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த திப்பு சுல்தான் :

போரின் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட திப்பு சுல்தானின் படை பிறகு ஆங்கிலேய கட்டுப்பாட்டில் கவரப்பட்ட சிலர் மூலம் திப்பு சுல்தான் படையின் வியூகம் மாறியது. இதனால் திப்பு சுல்தான் படை தங்களது கட்டுப்பாட்டினை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தது. இதனை திப்பு சுல்தான் எதிர்பார்க்கவில்லை. தான் சூழ்ச்சியின் வலையில் சிக்கிக்கொண்டோம் என்பதனை உணர்ந்து கொண்டார்.

tipu-4

கடுமையாக சண்டையிட்ட பிறகு 1799ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி போர்க்களத்தில் ஆங்கிலேயர்களால் குண்டடிபட்டர். குண்டடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திப்பு சுல்தானிடம் வந்த ஆங்கிலேய படைத்தளபதியான காரன் வாலிஸ் தங்களுக்கு அடங்கி நடுங்க வேண்டும் என்று கூறினான்.

அதற்கு இறக்கும் தருவாயில் இருந்த “மைசூரின் புலி” திப்பு சுல்தான் அளித்த பதில் “உங்களிடம் ஆடுகள் போல 200ஆண்டுகள் வாழவதற்கு, உங்களை எதிர்த்து 2 நாள் புலியை போல வாழ்ந்து மடியலாம்.” என்று கூறி வீரமரணம் அடைந்தார்.

English Overview:
Here we have Tipu Sultan biography in Tamil. Above we have Tipu Sultan history in Tamil. We can also say it as Tipu Sultan varalaru in Tamil or Tipu Sultan essay in Tamil or Tipu Sultan Katturai in Tamil.

பகத் சிங் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்