பகத் சிங் வாழ்க்கை வரலாறு

Bagath-singh
- Advertisement -

இந்தியாவின் விடுதலை போராட்டவீரர்களில் ஒரு முக்கியமான வீரர் பகத் சிங் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய போராளியாகவும் இவர் திகழ்ந்தார். அந்தக்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த ஒரு குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயது முதல் போராட்டக்குணம் மிகுந்தவராக காணப்பட்டார். எனவே இவர் பொதுவுடைமை புத்தகங்களை விரும்பி படிப்பார்.

bagath singh-1

போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றபோது அங்கு ஆங்கிலேயர்களால் இந்திய கைதிகள் நடத்தப்படும் விதம் தவறாக உள்ளது என்று கூறி அவர்களுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இவருடைய வாழ்க்கை தொகுப்பினை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம். அதனை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து வாசிக்கவும்.

- Advertisement -

பகத் சிங் பிறப்பு :

பகத் சிங் அவர்கள் சீக்கிய மதத்தினை தழுவிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.பகத் சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கா எனும் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 27 [அ] 28 ஆம் தேதி பிறந்தார். அவருடைய பிறந்ததேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவருடைய பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். சர்தார் கிசன் சிங் மற்றும் வித்தியாவதி ஆகியோர் பகத் சிங் பெற்றோர்கள் ஆவர்.

இவரது இளம் வயது முதலே போராட்டக்குணம் உள்ளவராக இருந்த இவர் மிகுந்த தேசப்பற்று உள்ளவராக இருந்தார். இவரது குடும்பத்தில் பலர் ராணுவத்திற்காக பணியாற்றினர்.

- Advertisement -

இயற்பெயர் – பகத் சிங்
பிறந்த தேதி மற்றும் வருடம் – செப்டம்பர் 27 [அ] 28, 1907
பெற்றோர் – சர்தார் கிசன் சிங் மற்றும் வித்யாவதி
பிறந்த இடம் – பங்கா [ பஞ்சாப் ]
இறந்த தேதி -மார்ச் 23, 1931 [24 வயதில் தூக்கிலிடப்பட்டார்]

பகத் சிங் சபதம் :

- Advertisement -

1919ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையினை ஏற்படுத்தியது. ஜாலியன் வாலாபாக் எனும் பூங்காவில் இருந்த அனைத்து மக்களையும் ஆங்கிலேயர் கண்மூடித்தனமாக சுட்டு கொன்றனர். இந்த நிகழ்வே ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வாகும். இந்த நிகழ்வு பகத் சிங் மனதில் நீங்கா துயரை ஏற்படுத்தியது அந்த சம்பவம் நிகழ்ந்த போது அவருக்கு அவரது வெறும் 12 மட்டுமே.

bagat singh-3

ஆனாலும், நாட்டின் மீது வைத்திருந்த பற்று காரணமாக அந்த நிகழ்வு அவரை பாதித்தது. மேலும் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருக்கும் மக்களின் நிலைமை குறித்தும் அவர் மிகுந்த வேதனை கொண்டார். இந்த நிகழ்வினால் அன்றைய தினம் தனக்குள் ஒரு சபதம் பூண்டார். அது யாதெனில் இந்திய மண்ணில் இருந்து ஆங்கிலேயர்கள் முழுமையாக வெளியேறும் வரை தன்னால் முடிந்த அளவிற்கு நாட்டிற்காக போராட வேண்டும் என்பதே.

வீட்டை விட்டு வெளியேறிய பகத் சிங் :

தனது 19 வயதில் அவர் இந்தியாவின் தேசிய இளைஞர் சங்கம் ஒன்றை நிறுவினார். பிறகு அடுத்த ஆண்டு தனக்கு திருமணம் நடக்கப்போவதை அறிந்த பகத் சிங் தனது பெற்றோர்களிடம் சொல்லாமல் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் நகருக்கு சென்றார்.

அந்த கடிதத்தில் பகத் சிங் எழுதியவை – ” எனது பிறப்பு எனது தாய் மண்ணிற்காக ” அதனால் நான் என் இந்திய தேசத்திற்காக போராட விரும்புகிறேன். எனவே என் வாழ்க்கையில் குடும்பம், திருமணம் போன்ற எந்த ஆசையும் எண்ணமும் எனக்கு கிடையாது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை நான் போராடவே விரும்புகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நவஜவான் பாரத சபா :

பகத் சிங் தனது 19ஆவது வயதில் “நவஜவான் பாரத சபாவை” நிறுவினார் . நவஜவான் பாரத சபா என்றால் இந்திய இளைஞர்கள் சங்கம் என்று அர்த்தம். இந்த சங்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் பார்வை அந்த சங்கத்தின் மீது திரும்பியது. அவர் நிறுவிய சங்கத்தில் நாடு முழுவதும் இருந்து இந்திய இளைஞர்கள் அவரது சங்கத்திற்கு தங்களது ஆதரவினை கொடுத்தனர்.

சங்கத்திற்கு ஆதரவு தருவதோடு மட்டுமின்றி அவ்வப்போது ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நிகழ்த்தினர். காந்தியின் அகிம்சை கொள்கை மீது எல்லாம் பகத் சிங்கிற்கு நாட்டம் இல்லை. அகிம்சை முறையினை விடுத்து சண்டையிட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர் நினைத்தார்.

bagat singh-4

மேலும் அவரது தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்தது. இதனை கவனித்த ஆங்கிலேய அரசு பகத் சிங்கை இப்படியே விடக்கூடாது என்று அவர் மீது பொய்யாக ஒரு குண்டு வெடிப்பு வழக்கினை ஜோடித்து அவரை சிறைக்கு அனுப்பினர். பிறகு ஐந்து வாரங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்தார்.

லாலா லஜபதி ராயை தாக்கிய சைமன் குழு :

இந்தியாவின் அரசியல் அமைப்பு நிலைமையினை பற்றி தெரிந்துகொள்ள ஆங்கிலேய அரசு ஒரு குழுவினை இந்தியாவில் நியமித்தது அந்த குழு தான் ” சைமன் குழு ” இந்த குழுவானது இந்தியாவின் அரசியல் நிலைமையினை பற்றி ஒரு அறிக்கை ஒன்றினை ஆங்கிலேய அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் இதுவே அந்த குழுவினை உருவாக்கியதற்கான நோக்கமாகும்.

இந்த சைமன் குழுவினை எதிர்த்து லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் அமைதியான ஒரு அணிவகுப்பினை நடத்தினார். ஆனால் அவர்களை கலைக்க ஆங்கிலேய காவல் மேல் அதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் உத்தரவிட்டார். அதன்படி அணிவகுப்பில் பங்கேற்றவர்களை காவலர்கள் தாக்கி அந்த அணிவகுப்பினை கலைத்தனர்.

மேலும் லாலா லஜபதி ராயை காவல் மேல் அதிகாரியான ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்பவர் நேரடியாக தாக்கினார். இதனால் லாலா லஜபதி ராய் அவர்கள் படுகாயம் அடைந்தார்.

காவல் அதிகாரி சாண்டர்சை சுட்டு கொன்ற பகத் சிங் :

ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்பவர் மூலம் படுகாயம் அடைந்த லாலா லஜபதி ராய் அடிபட்ட அடுத்த மாதம் காலமானார். இதனால் கோபமுற்ற பகத் சிங் தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை கொல்ல முடிவு செய்தார். இதன் காரணமாக அவரை கொல்ல திட்டம் தீட்டப்பட்டது.

அந்த திட்டத்தின் படி காவல் தலைமை அலுவலகத்தில் இருந்து ஜேம்ஸ் ஏ ஸ்காட் வெளியே வரும்போது சுட்டு கொல்லலாம் என்று முடிவு செய்தனர். ஆனால், பகத் சிங் ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை நேரில் கண்டதில்லை. திட்டமிட்டபடி காவல் தலைமை அலுவலகத்தின் அருகில் பகத் சிங் மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து இருந்தனர்.

தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்று நினைத்து அவருக்கு பதிலாக சாண்டர்சை பகத்சிங்கிடம் அடையாளம் காட்டினர். உடனே பகத்சிங் சாண்டர்சை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மூலம் சுட்டுக்கொன்று அங்கிருந்து தப்பிச்சென்றார்.

தூக்கிலிடப்பட்ட பகத்சிங் :

ஆங்கிலேய அரசுக்கு எதிராக அகிம்சை வழியினை தவிர்த்து முற்றிலும் சண்டைகளையிட்டே விரட்டி அடிக்கவேண்டும் என்று நினைத்த பகத்சிங் பலமுறை அவர்களை தனது ஆதர்வாளர்களோடு சேர்ந்து தாக்கியுள்ளார் . இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் அறவழி போராட்டம் நடக்க இந்த வாலிபன் மட்டும் ஆங்கிலேய அரசை தனது தைரியத்தின் மூலம் எதிர்த்தான் .

bagat singh-2

இதுபோன்று ஒருநாள் ஆங்கிலேயர்கள் இடையே “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு சென்ற பகத்சிங் அந்த கட்டிடத்தின் உள்ளே வெடிகுண்டு வீசினார். ஆங்கிலேயர்களை எதிர்த்து தனி ஒரு இளைஞன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருப்பதை கவனித்த ஆங்கிலேய அரசு பகத்சிங்கினை முடிவுக்கு கொண்டு வர தருணத்தினை எதிர்பார்த்து காத்திருந்தது.

கடந்த முறை போன்று மற்றொருமுறை நடைபெற்ற ஆங்கிலேயர்கள் இடையேயான கூட்டத்தில் அவர்களுக்கு எதிராக துண்டு பிரச்சாரம் காதிதத்தினை போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று இந்தியாவை மேலோங்கி கோஷமிட்டார். பிறகு அவரே ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்தார். அவரை விட்டுவைத்தால் நம்மால் இங்கு இருக்க முடியாது என்று நினைத்தனர் ஆங்கிலேயர்கள்.

இதனால் சாண்டர்சை சுட்டுக்கொன்ற வழக்கினை திரும்ப எடுத்து பகத்சிங்கிற்கு “தூக்கு தண்டனை” விதித்தனர். இந்த தூக்கு தண்டனை ஒப்புகை பத்திரத்தில் மஹாத்மா காந்தி கையொப்பம் இட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி பகத்சிங் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தனது 24ஆம் வயதில் தூக்கிலிடப்பட்டார்.

இளைஞர்களின் முன்னோடி பகத்சிங் :

அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா அடிமையாக இருந்ததை நினைத்து தனது இளம் வயது முதல் நாட்டுப்பற்று கொண்டு தனது ஆசைகளை தவிர்த்து நாட்டிற்காக மட்டுமே எனது இந்த பிறவி அமையவேண்டும் என்று நினைத்து தனது போராட்ட குணத்தால் ஆங்கிலேயர்களை அச்சம் அடையவைத்தவர் பகத் சிங்.

ஆங்கிலேய அடக்குமுறையினால் தூக்கிலிடப்பட்ட அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு தைரியத்தின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. மேலும் இளைஞர் ஒவ்வொருவரும் துடிப்போடு நாட்டிற்காக ஒரு பாதிப்பு வந்தால் தங்களது பங்களிப்பினை அளிக்கவேண்டும் என்று அனைவர்க்கும் முன்னோடியாக இருந்து மறைந்துள்ளார்.

அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தைரியம் இந்த மண்ணை விட்டு என்றுமே மறையாது ” இன்குலாப் ஜிந்தாபாத்

English Overview:
Here we have Bagat Singh biography in Tamil. Above we have Bagat Singh history in Tamil. We can also say it as Bagat Singh varalaru in Tamil or Bagat Singh essay in Tamil or Bagat Singh Katturai in Tamil.

கம்பர் வாழ்க்கை வரலாறு பற்றி முழுமையாக அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

- Advertisement -