Tirupati : திருப்பதியில் VIP தரிசனம் கிடையாது. கோவில் நிர்வாகம் அதிரடி

tirupati
- Advertisement -

உலகிலேயே தினமும் பல லட்சக்காணக்கில் பக்தர்கள் வந்து வழிபடும் இந்து கோயில் என புகழ் பெற்ற கோயில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில். ஆதிசேஷன் போன்ற ஏழுமலைகளின் மீது நின்றவாறு பக்தர்கள் அனைவருக்கும் காட்சி தரும் ஸ்ரீநிவாச பெருமாளை பாத யாத்திரை மூலமாகவும், பாத யாத்திரை செய்ய முடியாதவர்கள் வாகனங்களிலும் வந்து திருமலை ஆண்டவனை தினமும் தரிசித்து அவனது அருளை பெறுகின்றனர்.

tirupati

பொதுவாக இறைவழிபாட்டிற்கு முதல் அடிப்படை தேவையே மனதளவில் மிகுந்த பொறுமை குணம் ஆகும். ஆனால் இன்றைய மின்னல் வேக யுகத்தில் சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைக்காத பலர், இறைவனை முறையாக வழிபடுவதற்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. ஆனாலும் கோயிலுக்கு சென்று இறைவனை விரைவாக தரிசனம் செய்தால் மட்டுமே போதும் என்கிற மனநிலை இன்று பலருக்கு இருக்கிறது.

- Advertisement -

திருப்பதி போன்ற நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் கோயில்களில் வி .ஐ .பி எனப்படும் முக்கியஸ்தர்கள், அரசியல் துறையினர், பிரபலங்கள் பெருமாளை விரைவாக தரிசித்து செல்வதற்காக கொண்டுவரப்பட்ட நடைமுறை தான் வி. ஐ. பி தரிசன டிக்கட் முறை, பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் போன்றோர்களின் சிபாரிசு பெயரில் வழங்கப்படும் தரிசன டிக்கட் வழங்கும் முறைகள்.

Perumal

மற்ற சாதாரண நாட்களில் இத்தகைய பரிந்துரை டிக்கட் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், திருப்பதி திருமலை கோயிலில் நடைபெறும் விழாக்களின் காலத்தில் பெருவாரியான பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதால், வி. ஐ. பி தரிசனம், சிபாரிசு கடித தரிசன முறைகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில் மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் 20 தேதி வரை திருப்பதி திருமலையில் ஸ்ரீவாரி தெப்போற்சவம் நடைபெறுவதால் வி. ஐ. பி தரிசனம், சிறப்பு தரிசனம், சிபாரிசு கடித தரிசன முறை போன்றவை தெப்போற்ச வம் முடியும் காலம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருப்பதி செல்கையில் இங்கு வழிபட்டால் என்ன பலன் தெரியுமா ?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati vip darshan in Tamil. It is also called as Tirupati vip darshan cancellation in Tamil or Teppotsavam in tirumala 2019 in Tamil or Tirupati kovil dharisanam in Tamil or Tirupati kovil sirappu dharisanam in Tamil.

- Advertisement -