உங்களது முகம் தங்கம் போல தகதகன்னு ஜொலிக்க ஆசையா இருக்கா? தினமும் குளிக்கிறதுக்கு முன்னாடி இத மட்டும் முகத்தில் தடவிட்டு குளிச்சி பாருங்க!

face3

எல்லாருக்கும் தங்களது சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். வசதி உள்ளவர்கள் கோல்டன் பேஷியல், மசாஜ் போன்ற விஷயங்களை அதிகப்படியான பணம் கொடுத்து, செயற்கையான முறையில் தங்களது உடலையும் முகத்தையும் அழகாக மாற்றிக் கொள்வார்கள். ஆனால் நிரந்தரமான அழகை, இயற்கையான பொருட்களை வைத்தே நாம் அமைத்துக் கொள்வதுதான் நல்லது. எதிர்காலத்தில் பக்க விளைவுகள் இல்லாமலும் இருக்கும். சரி, உங்களது முகம் மட்டும் அல்லாமல், உடல் முழுவதும் பல பலவென தங்கம் போல ஜொலிக்க உங்க வீட்ல இருக்கக்கூடிய விலை மலிவான இந்த 3 பொருட்களை சேர்த்து உங்களது உடம்பில் தேய்த்து, தடவி குளித்து பாருங்கள், பிறகு வித்தியாசத்தை.

face

எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய அந்த 3 பொருள் என்னென்ன? முதல்ல தெரிஞ்சுக்கலாம். தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு. இந்த மூன்று பொருட்கள் தான் அது. 2 ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறு, 2 சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து 5 லிருந்து 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யலாம். முகத்திற்கு மட்டும் தேய்க்க வேண்டும் என்றால் மேலே சொல்லப்பட்டுள்ள அளவுகள் சரியாக இருக்கும். உடல் முழுவதும் உங்களுக்கு பளபளப்பாக வேண்டுமென்றால், அளவுகளை கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

oil

முகம் அல்லது உடல் முழுவதும் 5 நிமிடம் மசாஜ் செய்த பின்பு, 10 நிமிடங்கள் வரை கூட இந்த கலவையை உங்கள் உடம்பில் ஊற விடலாம். எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. அதன் பின்பு நீங்கள் எப்படி சோப்பு போட்டு குளிப்பீங்களோ, அதே போல குளித்து கொள்ளுங்கள். இதை ஒருமுறை பயன்படுத்தினாலே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். உங்களது தோல் பளபளவென மாறி இருப்பதை நிச்சயமாக உணர்வீர்கள்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல், இந்த குறிப்பினை தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்களுடைய உடம்பில் இடுக்குப் பகுதிகளில், அதாவது அக்குள், கழுத்துப்பகுதி, கால் பகுதி, தொடைப் பகுதி, போன்ற இடங்களில் இருக்கக்கூடிய கருப்பு நிறம் படிப்படியாக குறைந்து, முழுமையாக கருநிறம் நீங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் இப்படி குளித்து வந்தாலே போதும். உங்களது உடல் அழகு மெருகேறி விடும். நிஜமாவே உங்க சருமம் தங்கம் போல ஜொலி ஜொலிக்க ஆரம்பிக்கும்.

பெண்கள் மஞ்சளுக்குப் பதிலாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம். தவறு கிடையாது. ஆண்கள் மஞ்சளை மட்டும் தவிர்த்து விட்டு, வெறும் தேங்காய் எண்ணெய் எலுமிச்சை பழச்சாறு கலந்து தேய்த்து மசாஜ் செய்து குளித்து கொள்ளலாம்.

face1

உங்களுக்கு வரட்சியான சருமம் ஆக இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம். எண்ணெய் வடியும் சருமம் ஆக இருந்தாலும் தாராளமாக இந்த குறிப்பை பயன்படுத்தலாம். எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. சில பேருக்கு மஞ்சள் போட்டால் முகத்தில் அலர்ஜி ஏற்படும் என்றால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள். சில பேருக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் இருக்கும். அப்படி இருந்தால் இதில் லேசாக உங்கள் கைகளில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து எந்த, ஒரு பக்க விளைவுகளும், எந்த ஒரு அரிப்பும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் உடல் முழுவதும் பயன்படுத்தலாம். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
30 நாட்களில் உங்களுடைய எலும்புகள் உறுதி பெற்று, நீங்களும் இரும்பு மனிதராக மாறலாம். வலுவிழந்த எலும்புகளை உறுதிப்படுத்த 1 டம்ளர் இதை குடித்தாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.