- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்களை தீர்க்கும் புரட்டாசி பௌர்ணமி தானம்

கஷ்டங்களை தீர்க்கும் புரட்டாசி பௌர்ணமி தானம்

- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டம் இல்லாத நபர்கள் என்று யாரையுமே கூற முடியாது. வெளித்தோற்றத்திற்கு வேண்டுமானாலும் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று இருப்பதாக தெரியும். ஆனால் அவர்களிடம் பழகினால் தான் அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினையை நம்மால் உணர முடியும். ஒவ்வொரு நபர்களும் வெளியில் கூற முடியாத அளவிற்கு கஷ்டத்தில் மாட்டிக் கொண்டு தவிர்க்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அவர்களுடைய கஷ்டம், விரைவில் தீரும் அப்படிப்பட்ட கஷ்டத்தை தீர்க்கக் கூடிய ஒரு தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கை அமைவதற்கு அவர்களுடைய கர்ம வினைகள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்குரிய அற்புதமான ஒரு பரிகாரமாக தான் தான தர்மங்கள் திகழ்கின்றன. எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு நாம் செய்யக்கூடிய ஒரு உதவியானது. நம்முடைய கர்ம வினையை தீர்ப்பதோடு நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் சிறப்பு மிகுந்த நாட்களில் தான தர்மத்தை செய்ய வேண்டும் என்ற ஒரு வழிமுறையை ஏற்படுத்தினார்கள். அந்த வகையில் புரட்டாசி பௌர்ணமி நாளன்று நாம் சில தானத்தை செய்வதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் தீரும்.

- Advertisement -

இந்த தானத்தை புரட்டாசி பௌர்ணமி ஆன அக்டோபர் மாதம் ஆறாம் தேதி மதியத்திற்கும் மேல் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தானத்திற்கு நமக்கு அதிகப்படியாக தேவைப்படுவது வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம், கருப்பு எள் இவைதான். இந்த பொருட்களை நாம் பசுமாட்டிற்கும் காகத்திற்கும் தானமாக தர வேண்டும். பசுமாடு என்பது அனைத்து தெய்வங்களும் குடியிருக்கக்கூடிய கோமாதா என்பதால் அதற்கு நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் தான தர்மங்களும் தெய்வத்திற்கே செய்த பலனை பெற முடியும்.

அதேபோல் காகம் என்பது சனீஸ்வர பகவானின் வாகனமாக திகழ்கிறது. காகத்திற்கு நாம் எந்த ஒரு தானத்தை செய்தாலும் அது சனீஸ்வர பகவானுக்கே சென்றடையும் என்பதால் கர்ம வினைகள் குறைவதற்கு இந்த இரண்டு பேருக்கும் நாம் கண்டிப்பான முறையில் நம்மால் இயன்ற பொருட்களை தானம் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக புரட்டாசி பௌர்ணமி நாளன்று பசு மாட்டிற்கு வாழைப்பழத்தை தானமாக தரும் பொழுது அதீத அளவு பலன் கிடைக்கும். அதிகப்படியான கஷ்டங்கள் இருப்பவர்கள் செவ்வாழைப்பழத்தை தானமாக தரவேண்டும்.

- Advertisement -

அதேபோல் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதை ஊற வைத்து அதனுடன் வெல்லத்தைக் கலந்து நம் கைப்பட பசு மாட்டிற்கு தருவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும் குறையும். நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களும் விலகும். அன்றைய தினம் காகத்திற்கு உப்பு போடாமல் பச்சரிசி சாதத்தை வைத்து அதனுடன் எல்லை கலந்து தானமாக தருவதன் மூலம் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் கர்ம வினைகளும் நீங்கும். இந்த தானத்தை நம்மால் இயன்ற நாட்களில் செய்வது அதீத பலனைத் தரும். மற்ற நாட்களில் செய்ய இயலவில்லை என்றாலும் இந்த புரட்டாசி பௌர்ணமி நாளில் செய்வதன் மூலம் கண்டிப்பான முறையில் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி பௌர்ணமி வழிபாடு

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் செய்யக்கூடிய இந்த தானமானது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களை குறைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்