நியூமெராலஜி படி உங்களுக்கான இன்றைய பலன் – மாசி 22

numerology

ஜோதிடத்தில் நவகிரகங்கள் எப்படி ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை செலுத்துதுவதை போலவே நவகிரகங்களுக்குரிய 1 முதல் 9 வரை உள்ள எண்கள் மனித வாழ்வில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த எண்களை கொண்டு கணிக்கிட்டு சொல்லப்படும் ஒரு ஜோதிட சாஸ்திரம் தான் நியூமெராலஜி எனப்படும் எண் கணித சாஸ்திரம் ஆகும். அந்த வகையில் 1 முதல் 9 வரையான எண்களின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய (08.03.2019) தினத்திற்கான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

Suryan God

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 1 ஆம் எண்ணிற்குரிய சூரிய பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். சூரியனுக்கு புதன் பகவான் சமமான கிரகமாக இருப்பதால் இன்று இந்த எண் காரர்களுக்கு சாமர்த்தியம் மிகும். பேச்சாற்றல் மூலம் வருவாய் உண்டாகும். அரசாங்க ரீதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் அறிவாற்றல் சிறப்பாக இருக்கும்.

2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 2 ஆம் எண்ணிற்குரிய சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (08.03.2019) இந்த 2 ஆம் எண் காரர்களுக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். புதிய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மனதில் எழும். மனதளவில் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். பழைய கடன் தொகை, நிலுவை தொகைகள் எல்லாம் வந்து சேரும்.

sevvai

3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 3 ஆம் எண்ணிற்குரிய குரு பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (08.03.2019) இந்த 3 ஆம் எண் காரர்களுக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வைக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட விரும்புபவர்கள் அம்முயற்சிகளை சற்று தள்ளி போடுவது நல்லது. சிலருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். பணவரவு விடயங்களில் சற்று தாமதத்திற்கு பிறகு உங்களுக்கு வர வேண்டிய தொகை வந்து சேரும்.

- Advertisement -

rahu 1

4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 4 ஆம் எண்ணிற்குரிய ராகு பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (08.03.2019) இந்த 4 ஆம் எண் காரர்களுக்கு தொழில், வியாபாரங்களில் சுமாரான லாபங்களே இருக்கும். மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். உங்களுக்கு மறைமுக எதிரிகள் இருப்பதால் அனைத்திலும் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

budhan

5, 14, 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 5 ஆம் எண்ணிற்குரிய புதன் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (08.03.2019) இந்த 4 ஆம் எண் காரர்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த பணியிட மாறுதல்கள், பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒரு சிலருக்கு பொன் ஆபரணங்கள் வாங்கும் அமைப்பு ஏற்படும். சிலர் திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். திருமண முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

sukran

6, 15, 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 6 ஆம் எண்ணிற்குரிய சுக்கிரன் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (08.03.2019) இந்த 6 ஆம் எண் காரர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அனைத்து காரியங்களிலும் நிதானமாக ஆலோசித்து ஈடுபடுவது நல்லது. ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொழில், வியபாரங்களில் சுமாரான லாபங்கள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு சற்று அலைச்சல்களுக்கு பிறகு வேலை கிடைக்கும்.

Astrology ketu

7, 16, 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 7 ஆம் எண்ணிற்குரிய கேது பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (08.03.2019) இந்த 7 ஆம் எண் காரர்களுக்கு இன்றைய தினம் தாங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவார்கள். தடையில்லாத பொருள் வரவு இருக்கும். உடல் மற்றும் மன நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தள்ளி போடுவது நல்லது. பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

Sani baghavan

8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 7 ஆம் எண்ணிற்குரிய சனி பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (08.03.2019) இந்த 8 ஆம் எண் காரர்களுக்கு உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

sevvai

9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 9 ஆம் எண்ணிற்குரிய செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நபர்கள் ஆவர். நியூமெராலஜி கணிப்பின் படி இன்றைய தினம் (08.03.2019) இந்த 8 ஆம் எண் காரர்களுக்கு பிறருடன் மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைத்திலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
புதன் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.