இன்றைய ராசி பலன் – 01-02-2018

12-rasi

மேஷம்:
mesham
இன்று இனிமையான நாள். சிலர் கோவிலுக்கு சென்று பிராத்தனைகளை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்த படி அமையும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். உறவினர்கள் வீட்டுக்கு செல்விர்கள், அவர்களுடன் சிறுசிறு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய பொருட்கள் மற்றும் ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

ரிஷபம்:
rishabam

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் பணி சுமையால் நெருக்கடி ஏற்படும், பிறகு பணியாளர் உடதவியுடன் செய்து முடிப்பீர்கள். இன்று குடும்பத்தாருடன் நண்பர்கள் வீட்டுக்கு செல்விர்கள். வியாபாரமும் இன்று சுமாராகத்தான் இருக்கும், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்.

மிதுனம்:
இன்று குடும்பத்தாரின் ஆலோசனை படி நடந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். இன்று பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் ,வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீண் செலவு ஏற்படும். தந்தையின் எதிர்பார்ப்பை நீரைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

கடகம் :

Kadagam
இன்றைய அலுவலக பணிகளை பிறரை நம்பி ஓப்படைக்காமல், தாங்களே செய்வது நல்லது. சில முடிவுகளை எடுக்கும் பொது யோசித்து செய்யுங்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் இன்று தோய்வகத்தான் இருக்கும். பணியாளர்களால் வீண் செலவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்:
simam
இன்று மகிழ்ச்சியான நாள். அலுவலக பணிகளில் பணியாளர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் கிடைக்கும். இன்று குடும்பத்தாருடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.. பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள்.

கன்னி:

இன்று ஆனந்தமான நாள். உறவினர்களுக்கு சில ஆலோசணைகளை வழங்குவீர்கள். இன்று மன தைரியம் அதிகரிக்கும் .நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அலுவலத்தில் பணிச்சுமை காரணமாக இன்று சோர்வாக காணப்படுவீர்கள். பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வியாபாரரத்தில் இன்று எதிர் பார்த்த விற்பனை இருக்காது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்கைதுணையுடன் பயணம் செய்விர்கள்.

துலாம்:

அலுவலக பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதிகாரிகளால் சங்கடங்கள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தை விட அதிகரிக்கும். சில முடிவுகளை எடுக்கும் போது குடும்பத்தில் உள்ளவர்களோடு ஆலோசனை செய்யுங்கள். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயமும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

சிலர் புதிய பொருட்களை வங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். சகோதரர்கள் மூலம் எடுத்த காரியம் சுமுகமாக முடியும். சிலர் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் ஏற்படும்.

தனுசு:

இன்று ஆனந்தமான நாள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள். அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தில் இன்று முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தாரின் ஆலோசனைகளை கேட்பீர்கள். உறவினர்கள் வீட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேர வாய்ப்பு உள்ளது.

மகரம்:
magaram
அரசாங்க பணிகள் எதிர்பார்த்த படி சுமுகமகா முடியும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளும்போதும் சிந்தித்து செயல்படுங்கள். அலுவலக பணிகள் சற்று கூடுதலாக இருக்கும். சக பணியாளர்களை அனுசரிச்சு நடந்து கொள்ளுங்கள். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

கும்பம்:

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இன்று வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள். புதிய முயற்சிகள் எடுக்கும் பொது கவனமாக செயல்படுங்கள். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்றம் இரக்கம் காணப்படும். மாலையில் நண்பர்களை சந்திப்பீர்கள். அதனால் ஆதாயம் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கல் எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள்.

மீனம்:

இன்று இனிமையான நாள். அலுவலக பணிகளை விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தாயின் தேவையை அறிந்து உதவுவிர்கள், வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். குடும்பத்தாருடன் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் உண்டாகும், அதனால் கவனத்துடன் செயல்படுங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.