இன்றைய ராசி பலன் – 03-02-2018

12-rasi

மேஷம்:
mesham
குடும்பத்தாருடன் சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு விலகிவிடும். இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலையே இருக்கும். அதனால் முதலீடு செய்பவர்கள் கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் செலவுகள் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
இன்று ஆனந்தமான நாளாக உங்களுக்கு அமையும். அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள், அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இன்று வழக்கம்போல் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் முழு நாட்டம் செலுத்துவீர்கள்.

மிதுனம்:
Midhunam
குடும்பத்தாரின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். இன்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவு எடுக்கும்போது, பிறரை ஆலோசனை செய்த பிறகு முடிவு எடுங்கள். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலையே காணப்படும். உறவினர்களிடமிருந்து ஆனந்தமான செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் வழக்கமான விற்பனையே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை துணைவியால் இன்று ஆனந்தத்தில் மூழ்கி இருப்பிர்கள்.

கடகம் :
இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் கடன் வாங்க நேரிடலாம். அலுவலக பணிச்சுமை காரணமாக சோர்வாக காணப்படுவீர்கள், பிறகு பணியாளர்களின் உதவியால் பணியை சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் குறைவாகத்தான் இருக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று அனைத்து செயல்களிலும் வெற்றிபெறுவீர்கள்.

சிம்மம்:
simam
இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு விலகும். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தாருடன் பயணம் செய்ய நேரிடும். வியாபாரம் இன்று மேலோங்கி காணப்படும், எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.

கன்னி:

இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். தாய்வழி உறவுகள் மூலம் செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தெய்வ வழிபாட்டிற்காக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடன் அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரத்தில் பணியாளர்களுடன் பிரச்சனையில் ஈடுபடவேண்டாம். அது உங்களுக்கு பாதகமா முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று பெற்றோர்களால் அனுகுலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

இன்று மகிழ்ச்சியான நாள். பிள்ளைகள் உங்கள் சொல்படியே நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் பணியாளர்களின் உதவியுடன் பணியை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

இன்று ஆனந்தமான நாளாக அமையும். சகோதரர்களின் உதவி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். அலுவலக பணிகளை தாங்களே செய்து முடிப்பது சிறந்ததாகும். அரசாங்கம் சார்ந்த பணிகளை உறிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பணியாளர்களுடன் கவனமாக இருங்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று செலவுகள் ஏற்படலாம்.

தனுசு:

இன்று உற்சாகமான நாளாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம், நண்பர்களுடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியங்களை சுறுசுறுபாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.

மகரம்:
magaram

உற்சாகமான நாள். தாயின் தேவையை அறிந்து பூர்த்திசெய்விர்கள். இன்று குலதெய்வ கோவிலுக்கு பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலக பணிகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சுமாராகத்தான் அமையும், பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கும்பம்:

இன்று வாழ்கைதுணைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மனநிலையை சரியாக புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், அதை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் வெளியூர்பயணம் மேற்கொள்வீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

மீனம்:

இன்று பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.