இன்றைய ராசி பலன் – 04-02-2018

12-rasi

மேஷம்:
mesham
இன்று மகிழ்ச்சியான நாள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.

ரிஷபம்:
rishabam

இன்று சகோதரர்கள் மூலம் வீண்செலவுகள் உண்டாகும். பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஆனந்தம் உண்டாகும். சிலர் தெய்வ வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் நாளாக அமையும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம்:
ஆனந்தமான நாள். வாழ்க்கைத்துணையுடன் வெளியில் செல்விர்கள், இருவரும் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். உறவினர்கள் வீட்டுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும். தாய் வழி உறவுகளால் செலவுகள் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம் :
Kadagam
இன்று அனுகூலமான நாள். தாய்யின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விடுமுறை என்பதால் சிலர் பயணம் மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் இன்று எதிர்பார்த்த லாபம் சுமாராகத்தான் இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவியுடன் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள்.

சிம்மம்:
simam
சகோதரர்களால் வீண்செலவு ஏற்படும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். புதிய முயற்சிகளை எடுப்பதை தவிர்க்கவும். மாலையில் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் இன்று முன்னேற்றம் காணப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தூரத்து சொந்தங்கள் மூலம் அனுகுலம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:

இன்று மகிச்சியான நாள். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம். பிள்ளைகளின் சந்தோசங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உற்சாகமான நாளாக அமையும்.

துலாம்:

தாய்வழி உறவுகள் மூலம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்ச்சியில் ஈடுபடுபவர்கள் சிந்தித்து செயல்படுங்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சுமாரான நாளாக தான் அமையும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

இன்று மகிழ்ச்சியான நாள். மனைவி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:

சிலர் எடுத்த காரியங்களை சுலபமாக முடிப்பீர்கள். புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சாதகமான சூழல் காணப்படும். சில முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உறவினர்களை சந்திக்க பயணம் செய்ய நேரிடலாம். இன்று சிக்கனத்தை கடைபிடிக்கவும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று ஆன்மிகத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொள்வீர்கள்.

மகரம்:
magaram
அனுகூலமான நாள். குடும்பத்தாருடன் அனுசரித்து செல்லுங்கள். மாலையில் மனைவியுடன் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள். எந்த முடிவு எடுத்தாலும் பலமுறை சிந்தித்து எடுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

குடும்பத்தாரின் தேவைகளுக்காக உழைக்க வேண்டி இருக்கும். மனைவியுடன் ஆலோசனை செய்த பிறகே முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் நீங்கள் எதிர்பார்த்த படி நடந்து கொள்வார்கள். எந்த ஒரு செயல் செய்தாலும் நிதானத்தை கடைபிடியுங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது.

மீனம்:

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். குடும்பத்தாரின் ஆலோசனை படியே நடந்து கொள்வீர்கள். மனைவி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் முடிப்பீர்கள். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இன்று ஏற்ற தாழ்வு இருக்கும். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்விர்கள், இன்று இருவரும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.