இன்றைய ராசி பலன் – 06-02-2018

- Advertisement -

மேஷம்:
mesham
மகிழ்ச்சியான நாள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதனால் ஆனந்தம் அடைவீர்கள். எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் வழக்கமான பணிகளே காணப்படும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த விற்பணை இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அலுவலக பணிகள் முடிவதற்கு தாமதமாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகளை குறைத்து கொள்ளவும்.

மிதுனம்:

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை தாமதமாக தொடங்குவது நல்லது. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். எதிர்பாரத பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின் போது கவனமாக இருங்கள்.

- Advertisement -

கடகம் :

அனுகூலமான நாள். மனைவியின் தேவையை நிறைவேற்றுவீர்கள். அரசுசார்ந்த காரியங்கள் முடிவதற்கு தாமதமாகும். இன்று தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணியை சிறப்பாக முடிப்பீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் கைக்கு வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்:
simam
இன்று புதிய முயற்சிகளின் ஈடுபட வேண்டாம். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த பணம் வரவு இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

கன்னி:

உற்சாகமான நாள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் வரும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் ஈடுபடவேண்டாம். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படும்.

துலாம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாக முடியும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் கடன் வாங்க நேரிடும். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் வீண்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிராத்தனைகளை நிறைவேற்றும் நாளாக அமையும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஆனந்தம் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு:

பெற்றோர்களால் ஆதாயம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரால் வீண்செலவு ஏற்படும். எதிர்பாராத பணம் வந்து சேரும். வியாபாரத்தில் முன்பை விட லாபம் அதிகரிக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:
magaram
இன்று உற்சாகமான நாள். புதிய ஆடைகளை வாங்கி சேர்ப்பிகள். எதிர்பாராத பணம் வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவலக பணிகளை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் பயணம் செய்ய நேரிடலாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

கும்பம்:

அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். பணியாளர்களின் உதவிகளை நாடுவீர்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாருடன் கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் கடன் வாங்க நேரிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:

இன்று அனுகூலமான நாள். பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்விர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் கலகலப்பாக இருப்பார்கள். மனைவியால் குடும்பத்தில் மகிச்சியாக காணப்படுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கைக்கு வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -