இன்றைய ராசி பலன் – 06-09-2020

rasi palan - 6-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் அமைதியை கடைபிடிக்கக் கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதனால் அனுகூலம் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை இருந்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். விஷ்ணு வழிபாடு செய்வது நன்மை தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மையே குறிக்கோளாக கொண்டிருக்கும் உங்கள் ராசிக்கு எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உருவாகும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். விநாயகர் வழிபாடு செய்து வாருங்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள்.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைகிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் நீங்கும். குடும்பத்தில் மன நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் நேரம் இது. எல்லா விஷயத்திலும் நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் நல்லது நடக்கும். அம்பிகை வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் நாளாக அமைய இருக்கிறது. எந்த விஷயத்திலும் நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியில் முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் பல தடங்கல்கள் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் மனமகிழ்ச்சி ஏற்படுத்தும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் தீரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பரஸ்பர அன்பு நீடிக்கும். பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வாருங்கள்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் குழப்பமாக இருந்தாலும் மனதைரியம் காணப்படும். எதையும் போட்டு அலட்டிக். கொள்ளாமல் வருவது வரட்டும் என்றபடி உங்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள். மலை போல் வந்த பிரச்சினைகளும் பனிபோல் நீங்கும். மன அமைதிக்கு யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். சனி பகவானை வழிபடுவது நன்மைகளை தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியே அனுகூலமான பலன்களை காணலாம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் இடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றமான பலன்களைப் பெறலாம். ஊதிய உயர்வு, இடமாற்றம் ஒரு சிலருக்கு உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனம் மகிழும். விநாயகரை துதித்து வாருங்கள் நன்மைகள் பெறலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஒருசிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் வரலாம். எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை நீடித்திருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத லாபம் கிடைக்கப்பெறும். பொருளாதார ரீதியாக பணவரவு சீராக இருந்தாலும் சிக்கனமுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். நல்ல புரிதல் உண்டாகும். பைரவர் வழிபாடு நன்மைகள் தரும்.

- Advertisement -