இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் செலவுகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். வாழ்க்கைத் துணை வழியில் சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களால் நன்மைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் லாபம் இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் விலகுவார்கள். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவும். பொருள் வரவு திருப்திகரமானதாக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்று எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். புதிய மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். ஒரு சிலர் குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு செல்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பூர்வீக சொத்து விவகாரங்களில் இழுப்பறி உண்டாகும். பண வரவுகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தினரிடையியே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். உற்சாகமாக செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பொதுவெளியில் உங்கள் செல்வாக்கு உயரும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் ஏதேனும் இழுப்பறி நிலை ஏற்படும். பண விவகாரங்களில் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் தடைகள் அனைத்தும் நீங்கும். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறிது இழுபறிக்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் விரும்பியவை கிடைக்கும். தூரத்து உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெற்றிகரமான பொருள் வரவு இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கலைத்தொழில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள். காரியங்களில் துணிந்து ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்கள் வழியில் சிலருக்கு பொருள் வரவு ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கும். சுப விரயங்கள் ஏற்படும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -