இன்றைய ராசி பலன் – 08-09-2020

rasi palan - 8-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கப் பெறும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் கூடும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும். வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் பின் தானாகவே சரியாகிவிடும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தாராள தன வரவு கிடைக்கப் பெறுவதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்-மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் படிப்படியாக நீங்க பெறும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதையும் முன்பின் ஆலோசிக்காமல் முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. அம்பிகை வழிபாடு செய்து வாருங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகளிலும், போட்டிகளிலும் சிறப்பான வெற்றியைப் பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். விநாயகர் வழிபாடு செய்துவர நன்மை உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த விஷயத்திலும் பிறரை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பது நல்லதல்ல. குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான வற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகி கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிவ வழிபாடு நன்மை தரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் ஒருசிலருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே கூடுமானவரை உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. பைரவரை வழிபட மன நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு உரிய வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை பெரியவர்களை மதிப்புடன் நடத்துவது நன்மை தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டு. வெள்ளிக்கிழமை தோறும் அம்மனை வழிபடுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக விருத்தி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் மற்றவர்களிடம் பாராட்டை பெறுவீர்கள். பெண்கள் பணிச்சுமை காரணமாக உடல் உபாதைகளை அனுபவிக்க நேரலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முருகப்பெருமான் வழிபாடு மிகவும் நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் நன்மைகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கப் பெறலாம். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். சுயதொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும். ஆஞ்சநேயரை வழிபட நன்மை பிறக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நாராயணரை வழிபட நிம்மதி உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் எதிர்பாராத நபர்களின் வருகையால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மை பெறலாம். பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும் நீங்கள் திறம்பட சமாளித்து விடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி உண்டு. சக்கரத்தாழ்வாரை வழிபட அமைதி பிறக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் தீர உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. பெண்களின் விருப்பங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கடன் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -