இன்றைய ராசி பலன் – 09-09-2020

rasi palan - 9-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் யாவும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடன் பாக்கிகள் வசூலாகி விடும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். வியாபாரத்தில் கூட்டாளிகள் உடனான மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் தீர்வுக்கு வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன வழியில் வீண் விரயங்களை சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மன நிம்மதியுடன் இருப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன், மனைவிக்கு இடையே அன்னோன்யம் கூட கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முகத்தில் பிரகாசமான தோற்றம் காணப்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார பிரச்சினையை சீர் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற விஷயங்களை நினைத்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதனால் நன்மை உண்டாகும். பயணங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய அவசியம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்க ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் அமைதி பிறக்கும். தலைவலி போன்ற பிரச்சினைகள் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய இலக்கை நோக்கி பயணம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்காக விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது அமைதியை தரும். வீடு வாகனம் போன்ற விஷயங்கள் அனுகூலமான பலன்களைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று தேர்வீர்கள். விநாயகரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் ஆதாயம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் மூலம் சில தேவையில்லாத அலைச்சல் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் நன்மையில் முடியும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மனக் கவலைகள் வந்து அமைதியை சீர்குலைக்கும். எடுக்கும் முயற்சிகள் தாமதத்திற்கு பின் பலனளிக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை நடக்கும். உத்தியோகத்தில் புதிய இடம் மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் ஆதாயம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகள் உடனான நட்பை புதுப்பிப்பதன் மூலம் அனுகூலமான பலன்கள் பெறலாம். பைரவர் வழிபாடு வெற்றியை தரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் சரளமாக இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக நண்பர்களுடன் இணக்கமாக செல்வதன் மூலம் ஆதாயம் காணலாம். நினைத்த விஷயங்கள் நிறைவேறக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -