இன்றைய ராசி பலன் – 1-4-2020

rasi palan - 1-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையப் போகிறது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும் பின் குழப்பங்கள் விலகும். தொல்பொருள் தேக்கங்கள் நீங்கி லாபகரமான பலன்களே கிடைக்கும். வீண் குழப்பங்கள் விலகும். எதிலும் நிதானமாக செயல்படுவது மிகவும் நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளாலும் உடன்பிறந்தவர்களாலும் சாதகமான பயன்கள் ஏற்படும். நண்பர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று பணிச் சுமை இருந்தாலும் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பல்வேறு மேன்மைகள் ஏற்படக்கூடிய நாளாக அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது மிக கவனமாக இருப்பது அவசியம். தொழில் ரீதியாக பார்த்தால் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். எதிர்பாரா தனவரவு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் படிப்பில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அளவுக்கு மீறிய தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக நீங்கள் எதிலும் முன் நின்று செயல்பட வேண்டியிருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் அவசியம். மற்றவர்களுடன் பேசும்பொழுது கனிவுடன் பேசவும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. முன்னேற்றமான பலனை அனுபவிப்பீர்கள். இருக்கக்கூடிய இடத்தில் பெயர் புகழ் அதிகரிக்கும். எதிரிகளால் இருந்தவர்கள் கூட நட்பு பாராட்டக் கூடிய சூழல் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பல சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்பட கூடிய நல்ல நாளாக இருக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல வாய்ப்புகள் கிடைக்க கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்கள் பிரச்சினைகள் குறைந்து புதிய யோகத்தினை பயன்படுத்தி நல்ல வாய்ப்புகள் மூலம் பலன்களை பெறுவீர்கள். எதிலும் திறமையுடன் செயல்படுவீர்கள். நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எளிதில் முடியக்கூடிய வேலை கூட இன்று கால தாமதமாக முடியும் வாய்ப்புகள் உள்ளது. எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலன் இருந்தாலும் ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவும் இருந்தாலும் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பயணங்களை முடிந்தவரை தள்ளிவைப்பது நல்லது. கடினமாக உழைக்க வேண்டிய சூழல் இருந்தாலும் உங்களுக்காக தன வரவு சிறப்பாக இருக்கும். அதனால் உங்களின் கடன் பிரச்சினைகள் தீரும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. பேச்சு செயலில் கவனமாக இருக்கவும். பணவரவு நன்றாக இருப்பதோடு உங்கள் தேவை பூர்த்தியாகும். தொழில் ரீதியாக கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் லாபகரமான பலனை எதிர்பார்க்கலாம். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதாலும் அவர்களுடன் பேசும் பொழுது பணிவுடன் இருப்பது மிகவும் நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எளிதில் முடியக்கூடிய வேலை கூட கால தாமதமாக முடியும் வாய்ப்பு உள்ளது. கடினமாக உழைக்க வேண்டிய சூழல் உண்டாகும். மாணவர்களால் அனுகூலம் உண்டாகும். பெரியவர்களையும் மதித்து நடப்பது மிகவும் முக்கியம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் பலமும் வலிமையும் கூடும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாகவும் சக பணியாளர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி நிம்மதி ஏற்படும். மன நிம்மதி அதிகரிக்கும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பங்குதாரர்கல் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சுமாராக தான் இருக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது அலைச்சல்கள் நிறைந்த நாளாக அமையும். எதிர்பாராத காரியங்கள் வெற்றியடையும். குழந்தைகளால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது. மனைவி வழி உறவினர்களால் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. சக ஊழியர்களுடன் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சலும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு சில பிரச்சனைகள் தரக்கூடும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொறுத்தவரையில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது மிகவும் அவசியம். உத்யோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. உயர் பதவி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.