இன்றைய ராசி பலன் – 1-7-2020

rasi palan - 1-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்ள கூடிய நாளாக அமையும். பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. புதிய நட்புகள் உருவாகும். தொழிலின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. லக்ஷ்மி அம்மனை வழிபட்டு வர பண பிரச்சனை விலகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் லாபம் காணும் நாளாக அமையும். தொட்டதெல்லாம் வெற்றியில் முடியும். வேலைப்பளுவும் அதிகமாக காணப்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு மனை வாங்க சூழல் ஏற்படும். வராகி அம்மனை வழிபட்டு வர இல்லத்தில் நிம்மதி நிலவும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு அதிகரிக்க கூடிய நாளாக அமையும். வியாபாரத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிறரிடம் அளவாக பேசுவது நல்லது. கண் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. ஸ்ரீதேவி தாயாரை வணங்கி வழிபட்டுவர கடன் தொல்லைகள் நீங்கும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டம் நிறைந்த நாளாக அமையும். உடன் இருப்பவர்களிடம் அளவாக பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிறு குறு தொழில் செய்வோருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். அம்மன் வழபாடு நல்ல பலன் தரும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக அமையும். புதிய முயற்சிகளில் தொழிலில் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் திறமைகளால் வெற்றி காண்பீர்கள். இழுபறியில் இருந்த கடன் பிரச்சனைகள் தீரும். துர்கை அம்மனை வழிபட்டுவர மன சஞ்சலங்கள் அகலும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். இதில் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சி கைகூட வாய்ப்புண்டு. உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பிடாரி அம்மன் வழிபாடு நிலையான வரவுக்கு வழிவகுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு மிகுந்த நாளாக காணப்படும். புதிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வேலைப்பளு அதிகமாக காணப்படும். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிறுசிறு காரியத் தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. முருகப்பெருமானை வணங்கி வர மனநிம்மதி அடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமையும். கணவன் மனைவிக்கிடையே நல்ல அன்னியோன்னியம் உருவாகும். குடும்பத்துடன் நல்லா யோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். எதிலும் யோசித்து முடிவெடுப்பது வெற்றியைத் தரும். ஆதிபராசக்தியை வணங்கிவர சுபிட்சம் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நெடு நாட்களாக நிலவி வந்த குடும்பப் பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். பணச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளை வெளியே மருத்துவ செலவுகள் ஏற்படும். காலட்சுமியை வழிபட்டு வர பண வரவு சீராக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பு மிக்க நாளாக அமையும். ஆனா வேகத்தில் தங்கள் புது முயற்சிகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலில் வீண் அலைச்சல்கள் ஏற்படும். திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் அக்கறை தேவை. ஹயக்ரீவர் வழிபாடு சிறப்பை கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய ஒரு உத்வேகத்தை தரக்கூடிய நாளாக இருக்கும். சுற்றத்தாரின் ஆதரவால் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். பாலில் புதிய முதலீடுகளால் லாபம் அடைவீர்கள். அரசாங்கத்தின் பணிபுரிவதற்கு பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. எலும்பு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நந்தி பகவானை வழிபட்டு மன சஞ்சலங்கள் விலகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனசஞ்சலங்கள் ஏற்படுத்த கூடிய நாளாக அமையும். எண்ணிய காரியங்கள் தடைப்படுவதால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எந்த செயலையும் குடும்பத்துடன் ஆலோசித்து முடிவெடுப்பதால் நன்மை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கங்கை அம்மனை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -