இன்றைய ராசி பலன் -10-02-2018

feb10

மேஷம்:
mesham
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு, பிறகு விலகிவிடும். சிலர் தெய்வ தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் சில மனக்கசப்பான விஷயங்கள் நடைபெறும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.

ரிஷபம்:
rishabam
அனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் கூடுதலான விற்பனையும் லாபமும் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மிதுனம்:
Midhunam
உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். அரசாங்க சார்ந்த காரியங்கள் தாமதமாக முடியும். அலுவலக பணிகள் இன்று அதிமாக காணப்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சக பணியரளர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அணைத்து காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும்.

கடகம் :
உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள், இல்லையென்றால் வயிரு சம்பந்தமான பிரார்ச்சனை ஏற்படக்கூடும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வின்செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அலுவலக பணிகளை கூடுதல் நேரம் பார்க்க வேண்டி இருக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியல் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலக பணிகளால் சோர்வாக காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபமும் விற்பனையும் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள்.

கன்னி:

உற்சாகமான நாள். எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் கூடுதல் பணிகளால் நெருக்கடி ஏற்படும். பிறகு பணியாளர்களின் உதவியுடன் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழலே காணப்படும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். முக்கிய முடிவு எடுப்பதற்கு மும்பு குடும்பத்தாரின் ஆலோசனைகளை பெறுங்கள். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி காணப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பயணத்தை தவிர்த்து கொள்ளுங்கள்.

Advertisement

தனுசு:

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். சகோதரர்களால் வீண்செலவு ஏற்படும். மாலையில் நண்பர்களை சந்திப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படும். பிறகு அதை சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மகரம்:
magaram
இன்று தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

கும்பம்:

உற்சாகமான நாள். புதிய முயற்சிகளால் மேலோங்கி நிற்பீர்கள். தாய் வழி உணவுகளிடம் இருந்து உதவி வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பாத்ததை விட லாபம் கூடுதலாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். பெற்றோர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் கூடுதல் பணிகளால் சோர்வாக இருப்பிர்கள். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்கையில் கவனமாக இருங்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிகிழ்ச்சியான நாளாக அமையும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.