இன்றைய ராசி பலன் – 10-10-2020

rasi palan - 10-10-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்திIல் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுடைய மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். சமுதாயத்தில் உங்களுடைய அந்தஸ்து உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் எதையும் துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை உங்களுக்கு எதிரிகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் ஒற்றுமை பேனலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் நிதானமும் அமைதியும் கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். எதையும் தெளிவாகச் சிந்திக்கும் உங்கள் ராசிக்கு எதிர் காலத்தைப் பற்றிய திட்டமிடல் மேலோங்கி இருக்கும். பெண்கள் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்ததை விட கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். டென்ஷன் மற்றும் அலைச்சலை சந்திக்க கூடிய நாளாக அமையும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வீண் விரயங்கள் சுப விரயங்களாக மாற்றிக்கொள்வது நல்லது. பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பு கொடுக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கப் பெறும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் போராட்டங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சிந்தித்து செயல்படுதல் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் அதிக லாபம் கிடைக்கப்பெறும். கடன்கள் வசூலாகும்.உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடித்து விடுவீர்கள்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் நபர்களால் தேவையற்ற பிரச்சினைகளும், மன கஷ்டங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் சற்று தள்ளி வைத்து எடுப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று என்னால் எதையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும் என்றாலும் சற்று எச்சரிக்கை தேவை. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் தேவையில்லாத பிரச்சினைகள் வர சாத்தியக்கூறுகள் உண்டு.

தனுசு
தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக அமையும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்க வாய்ப்புகள் உள்ளன. பெண்களுக்கு வேலை பளு காரணமாக சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் தொடர்பான விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். அரசு வழி காரியங்களில் அனுகூலம் தரும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் முடிவுக்கு வரும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்லது நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு நிச்சயம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியான எண்ணங்கள் மேலோங்கி காணப்படும். இறை வழிபாடுகளில் மன அமைதி பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் சாதக பலன் தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் மன அமைதி உண்டாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப நபர்களுக்கு இடையே ஏட்டிக்குப் போட்டியாக வாக்குவாதங்கள் நிகழலாம். பேச்சைக் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. முடிந்தால் மௌன விரதம் இருப்பது சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கப்பெறும். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -