இன்றைய ராசி பலன் – 10-5-2020

rasi palan - 10-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும். மேஷராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த முறையில் பணம் கைக்கு வந்து சேரும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கிடையே உண்டாகும். பிள்ளைகளிடம் பொறுப்பாக நடந்து கொள்வது மிகவும் அவசியம். உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். வியாபாரத்தில் லாபம் வழக்கம் போல இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். பெற்றோர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவுகள் செய்ய வேண்டியதாக இருக்கும். குடும்பத்துடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எதையும் சமாளிக்கும் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வந்து சேரும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிக்கு வாழ்க்கை துணை ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் வழக்கம் போலவே லாபம் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் வெற்றியை தரும். எதிர்பாராத இடத்தில் பணம் வந்து சேரும். செலவுகள் அதிகரிக்கக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கூடுதலாக இருக்கும். பெற்றோரை மதித்து நடப்பது மிகவும் நல்லது. நீங்கள் எந்த செயலை செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது மிகவும் நல்லது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெய்வீக அனுக்கிரகம் நிறைந்துள்ளது. கையில் எடுத்த காரியத்தை சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதை முடித்து விடுவீர்கள். பணம் வரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. குடும்பத்தில் குழந்தைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமைய போகிறது. ஒரு பிரச்சினைக்கு குடும்பத்தினரிடம் பேசி தீர்வு காண்பது மிகவும் நல்லது. எதிர்பார்த்த இடத்தில் பணம் வந்து சேரும் ஆயினும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகள் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதும் மிகவும் நல்லது. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த படியே இருக்கும். யாரிடமும் பணம் கேட்டு செல்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் உங்கள் கையில் வந்து சேரும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் வெற்றியை தரும். சகோதரர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த படியே விற்பனை லாபமும் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமைய போகிறது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் எடுபடும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையாகவும் நிதானமாகவும் பேசுவது மிகவும் நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். மாணவர்களின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. உங்கள் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத லாபம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்று நகை வாங்குவதற்கும் யோகம் உண்டாகும் மற்றும் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெறுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சிறு அக்கறையாக இருப்பது மிகவும் நல்லது. தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்ப பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளது. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் உறவினர்களால் முடிவடையும். எந்த செயலை செய்தாலும் கடவுளின் ஆசீர்வாதத்தை பெறுவது மிகவும் நல்லது. பெரியோர்களை மதித்து நடப்பதால் எதையும் சாதிப்பீர்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் அதனை பொறுமையாக ஆலோசித்து செய்வது மிகவும் நல்லது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் போதுமான பணம் உங்களிடம் இருப்பதால் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை செய்து வெற்றி பெறுவீர்கள். எந்த செயலை எடுத்தாலும் ஆழ்ந்து சிந்தித்து செய்வது மிகவும் நல்லது. சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி பெறுவீர்கள். எதிலும் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.